தென் மண்டல ஆராய்ச்சி மையம் (மன்னவனூர்)
செம்மறியாடு ஆராய்ச்சி நிறுவனம் | |
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 1965 |
சார்பு | இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் |
அமைவிடம் | , , இந்தியா |
வளாகம் | கிராமம் |
தென் மண்டல ஆராய்ச்சி மையம் (Southern Regional Research Centre ) என்பது மத்திய செம்மறி மற்றும் கம்பளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்டல நிறுவனமாகும். இது புது தில்லி, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் முதன்மை நிறுவனமாகும்.
வரலாறு
[தொகு]தென் மண்டல ஆராய்ச்சி நிறுவனம் இந்தியாவின், தமிழ்நாட்டில் கொடைக்கானல் அருகிலுள்ள மன்னவனூரில் 16 நவம்பர் 1965-ல் நிறுவப்பட்டது.[1] இந்த மையம் 1965ஆம் ஆண்டு முன்னாள் விவசாய அமைச்சர் சி. சுப்பிரமணியத்தால் உருவாக்கப்பட்டது. இது கொடைக்கானலிலிருந்து 30 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களுக்கும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் கீழ் செயல்படும் விலங்கு அறிவியல் ஆராய்ச்சி நிலையமாகும். இது மன்னவனூர் கிராமத்தில் 1,340 ஏக்கர்கள் (5.4 km2) பரப்பில் 2,000 மீட்டர்கள் (6,600 அடி) உயரத்தில் புல்வெளிகளுடன் அமைந்துள்ளது.
இந்த நிறுவனத்தில் செம்மறி ஆடு மற்றும் முயல் கம்பளி மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகிறது. இதனுடன் அங்கோரா, சின்சில்லா வளர்க்கப்படுகின்றன.[2]
இது பழனி மலையில் உயரமான புல்வெளிகளின் எஞ்சியிருக்கும் கடைசி பரந்த பகுதிகளுள் அமைந்துள்ளது. தைல மரம், வாட்டில் மற்றும் பிற தோட்டங்களால் சூழப்பட்டுள்ளது. புள்ளிமான், இந்தியக் காட்டெருது, செந்நாய், கடமான் உள்ளிட்ட பிற விலங்குகள் இந்த வளாகத்திற்கு வழக்கமான வரும் விலங்குகளாக உள்ளன. இங்கு இருக்கும் சிறிய ஏரியில் சாதாக் கெண்டை மீன், கண்ணாடி கெண்டை மீன் மற்றும் நீர்நாய்கள் உள்ளன.
ஆராய்ச்சி
[தொகு]இம்மையத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள்
- செம்மறி மற்றும் முயல் உற்பத்தியின் அனைத்து அம்சங்களிலும் அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி[3]
- இறைச்சி மற்றும் நார்ச்சத்து தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல், மற்றும் தரப்படுத்துதல்.
- செம்மறி ஆடு மற்றும் முயல் உற்பத்தி மற்றும் பயன்பாடு[4]
- விவசாயிகள், கிராமப்புற கைவினைஞர்கள் மற்றும் மேம்பாட்டுப் பணியாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களைக் கற்றுத்தருதல்
- பரிந்துரை மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குதல்.
ஆராய்ச்சி இலக்கு
[தொகு]இம்மையத்தில் அறிவியல் ஆராய்ச்சி இலக்குகள்:
- கள நிலைமைகளில் கறிக்கோழி மற்றும் அங்கோர முயல்களின் செயல்திறன் மதிப்பீடு
- பாரத் மெரீனோ மற்றும் அவிகலின் ஆடுகளுக்கான செயல் விளக்கப் பிரிவு
- தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான செயல்பாட்டு ஆராய்ச்சி திட்டம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "DG Appreciated SRRC as Potential Agri-ecotourism Centre". icar.org.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-30.
- ↑ "Sheep Research Center in the city Mannavanur". in.worldorgs.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-30.
- ↑ "Molecular characterization of Orf virus isolates from Kodai hills, Tamil Nadu, India". www.veterinaryworld.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-30.
- ↑ Mallick PK, Thirumaran SM, Pourouchottamane R, Rajapandi S, Venkataramanan R, Nagarajan G, Murali G, Rajendiran AS. Genetic trend for growth and wool performance in a closed flock of Bharat Merino sheep at sub temperate region of Kodai hills, Tamil Nadu. Vet World. 2016 Mar;9(3):276-80. doi: 10.14202/vetworld.2016.276-280. Epub 2016 Mar 16. PMID: 27057111; PMCID: PMC4823288.
வெளி இணைப்புகள்
[தொகு]- மத்திய செம்மறி மற்றும் கம்பளி ஆராய்ச்சி நிறுவனம், தென் மண்டல ஆராய்ச்சி மையம், மன்னவனூர்
- ஹைகிங் கவுஞ்சி - குக்கால்
- CSWRI, Avikanagar, ராஜஸ்தான், இந்தியா [1]