தென்றல் (கோட்டை)
தென்றல், முன்பு பிராடி கோட்டை என்று அழைக்கப்பட்டது, இந்தியாவின் சென்னையில் உள்ள ஒரு வீடு ஆகும். இதனை 1796-ல் கட்டிய அரசு ஊழியர் ஜேம்ஸ் பிராடி (1769-1801) நினைவாகப் பெயரிடப்பட்டது. இங்கு தற்போது கருநாடக இசைப் பள்ளி செயல்படுகிறது.[1][2]
வரலாறு
[தொகு]பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவன ஊழியரும், தொழிலதிபருமான ஜேம்ஸ் பிராடி என்பவரால், சென்னை நகர எல்லைக்கு வெளியே அமைந்திருந்த, அடையாறு நகரத்தில், கிவிப்பில் தீவில், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பதினொரு ஏக்கர் நிலத்தில், பிராடி கோட்டை கட்டப்பட்டது.[3] பிராடி சிறிது காலம் இங்கு வசித்து வந்தார். பின்னர், அவரது வீழ்ச்சி காரணமாக, குத்தகைதாரர்களுக்கு வீட்டை வாடகைக்குக் கொடுத்தார். வாடகைதாரர்களில் முதன்மையானவர் சர் தாமஸ் ஸ்ட்ரேஞ்ச், சென்னை உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி ஆவார்.[3]
1801ஆம் ஆண்டில் படகு விபத்து ஒன்றில் பிராடி இறந்ததைத் தொடர்ந்து, அர்புத்நாட் குடும்பத்தினர் இந்த சொத்தை வாங்கினர்.[1] பிராடி, இசுகாட்லாந்தின் மொரேஷையரில் உள்ள பிராடி கோட்டையின் இருக்கையான பிராடி குலத்தின் தலைவரின் வாரிசாக இருந்தார். பிராடி கோட்டை இப்போது இசுகாட்லாந்து தேசிய அறக்கட்டளைக்குச் சொந்தமாக உள்ளது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Muthiah, S. (2004). Madras Rediscovered. East West Books (Madras) Pvt Ltd. p. 187. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-88661-24-4.
- ↑ Making of Madras.
- ↑ 3.0 3.1 Diwan Bahadur S. E. Runganadhan, ed. (1939). "Some Old Madras Houses by A. D. Raghavan". Madras Tercentenary Celebration Committee Commemoration Volume. Indian Branch, Oxford Press. pp. 112, 116–117.
- ↑ National Trust for Scotland