உள்ளடக்கத்துக்குச் செல்

தெகிவளை மேம்பாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெகிவளை மேம்பாலம்
வகைசாலைவழி
இடம்தெகிவளை, இலங்கை
அமைத்தவர்இலங்கை வீதி அதிகாரசபை
திறக்கப்பட்ட நாள்அக்டோபர் 21 2008
நீளம்337 மீட்டர்
வழிகள்2

தெகிவளை மேம்பாலம் கொழும்பின் காலி வீதியில் தெகிவளைச் சந்தியில் ஏற்படும் வாகன நெரிசலைக் குறைக்க அமைக்கப்பட்டது. இரண்டு வழி கொண்ட 337 மீற்றர் நீளமான இந்த மேம்பாலம் மூலம் தெகிவளை சந்தியில் வாகன நெரிசலைக் குறைக்க வீதி அதிகாரசபை முயல்கின்றது.

சுமார் 720 மில்லியன் இலங்கை ரூபா செலவில் இந்தப் பாலம் அமைக்கப்பட்டது[1]. ஜூலை 7, 2009 இல் தெகிவளை மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகளை பிரித்தானிய நிறுவனமான மாபே ஜோன்சன் லிமிடட் அன்ட் அக்சஸ் எனும் நிறுவனம் பொறுப்பேற்று நிறைவேற்றியது [2]. 21 அக்டோபர், 2009 இல் இந்த மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவெய்தின.


இந்தப் பாலமூடாக ஒரு நாளைக்கு சுமார் 40,000 வாகனங்கள் பயணிப்பதாகக் கருதப் படுவதுடன் இந்தப் பாலத்தின் மூலம் தெகிவளை, கல்கிசை, ரத்மலானை ஆகியபிரதேசங்களில் ஏற்படும் வாகன நெரிசலையும் கட்டுப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உசாத்துணைகள்[தொகு]

  1. லங்கா புவத்
  2. "Dehiwala flyover to ease heavy traffic in Sri Lanka capital soon". Archived from the original on 2010-08-23. பார்க்கப்பட்ட நாள் 2010-08-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெகிவளை_மேம்பாலம்&oldid=3558954" இலிருந்து மீள்விக்கப்பட்டது