துவரை நகர்
Appearance
துவரை என்னும் நகரில் செம்பாலான கோட்டை இருந்தது. அவ்வூர் வள்ளண்மையால் சிறப்புற்று விளங்கியது. வேளிர் குடியினர் அதனைத் தலைநகராகக் கொண்டு தொன்றுதொட்டு ஆட்சிபுரிந்து வந்தனர். அக்குடி வடபால் முனிவனாகிய வசிட்டன் தவம் செய்த காட்டில் வாழ்ந்துவந்தது. அக்குடியில் நாற்பத்தொன்பதாவது கால்வழியில் வந்தவன் இருங்கோவேள்.[1] இவன் பாரிமகளிரை மணந்துகொள்ள மறுத்தவன். சோழன் கரிகாலனிடமும்[2], தலைதாங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனிடமும் [3] போரிட்டுத் தோற்றுப்போனவன்.
துவரை என்னும் இந்த நகர் வடநாட்டிலுள்ள துவாரகை.
சான்று மேற்கோள்
[தொகு]- ↑ “வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச் செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை உவரா ஈகைத் துவரை ஆண்டு நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே” - கபிலர் புறம் 201
- ↑ இருங்கோவேள் மருங்கு சாய - பட்டினப்பாலை 283
- ↑ தலையாலங்கானம் போரில் தோற்றுப்போன எழுவருள் ஒருவனாக இவன் இருங்கோ வேண்மான் எனக் குறிப்பிடப்படுகிறான். - அகநானூறு 36