உள்ளடக்கத்துக்குச் செல்

துர்க்கா சரண நாகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாக மகாசயர்

ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான துர்க்கா சரண நாகர் கிழக்கு வங்காளத்தின் (தற்போதைய வங்களாதேசம்) தேவ்போக்கில் 1846 ஆகஸ்டு 21இல் பிறந்தார். இவரது தந்தை தீனதயாள். ஹோமியோபதி மருத்துவரான துர்க்கா சரண நாகர் தமது அசாதாரணமான ஆளுமைக் குணத்தால் நாக மகாசயர் என்றழைக்கப்பட்டார்.(மகாசயர்=பெரியவர்). இவர், சுவாமி விவேகானந்தரால் ’உலகம் முழுவதும் சுற்றி வந்தும் நாக மஹாசயரைப் போன்ற மகானை எங்குமே பார்க்கவில்லை” என்று குறிப்பிடப்பட்டவர்.

துர்கா சரண் நாக் சிலை (நாக் மகாசாய்), தட்சிணேஸ்வர் காளி கோயில் வளாகம், வடக்கு 24 பர்கானாஸ், மேற்கு வங்காளம், இந்தியா

ஐம்பது வருடங்களுக்கு ஒருமுறை வரும் அர்த்தோதய யோகம் (மஹாவாருணி யோகம்) எனும் புனித நாளன்று இவரது தந்தை புனித நீராடி வழிபட கங்கைக்கு தன்னை அழைத்துச் செல்லச் சொன்னார்.நாக மகாசயரோ "உண்மையான பக்தியிருந்தால் கங்கா தேவி அவனது வீடு தேடி வந்து அருள்புரிவாள்" என்று பதில் கூறினார். நாகமகாசயரின் கூற்றுப்படியே அர்த்தோதய யோக தினத்தன்று நாகமகாசயரின் வீட்டு முற்றத்தின் தென் கிழக்கு மூலையில் கங்கை நீரூற்று தோன்றியது.கிராம மக்களும் அந்த கங்கா நீரூற்றில் நீராடினர். பின்னாளில் இந்நிகழ்வு பற்றி கேள்விப்பட்ட சுவாமி விவேகானந்தர் "நாக மகாசயரைப் போன்ற மகான்களுக்கு எதுவும் சாத்தியமே; தங்களின் திட சங்கல்பத்தால் மனிதர்களுக்கு கணப்பொழுதில் முக்தி அளிக்க வல்லவர்கள் அவர்கள்" என்று குறிப்பிட்டார்.

[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. கடவுளுடன் வாழ்ந்தவர்கள்; பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் இல்லறச் சீடர்கள் 2; பக்கம் 399-432
"https://ta.wikipedia.org/w/index.php?title=துர்க்கா_சரண_நாகர்&oldid=4113384" இலிருந்து மீள்விக்கப்பட்டது