துரிஞ்சிகுப்பம்
துரிஞ்சிகுப்பம்
Thurinjikuppam | |
---|---|
அடைபெயர்(கள்): விவசாய கிராமம், ஜவ்வாது மலையின் தொடக்கம் | |
ஆள்கூறுகள்: 12°36′32″N 79°07′21″E / 12.6087837°N 79.1225444°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை |
மண்டலம் | தொண்டை மண்டலம் |
வருவாய் கோட்டம் | ஆரணி |
சட்டமன்றத் தொகுதி | போளூர் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி | ஆரணி மக்களவைத் தொகுதி |
தோற்றுவித்தவர் | தமிழ்நாடு அரசு |
அரசு | |
• வகை | ஊராட்சி |
• நிர்வாகம் | துரிஞ்சிகுப்பம் ஊராட்சி |
• வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் | ஆரணி |
• மக்களவை உறுப்பினர் | திரு. எம்.கே.விஷ்ணுபிரசாத் (இந்திய தேசிய காங்கிரசு) |
• சட்டமன்ற உறுப்பினர் | திரு. சேகரன் (திமுக) |
• மாவட்ட ஆட்சியர் | திரு கே. எஸ். கந்தசாமி,இ. ஆ. ப. |
• ஊராட்சி மன்றத் தலைவர் | திருமதி.ஆர்த்தி பாஸ்கரன் |
பரப்பளவு | |
• மொத்தம் | 12 km2 (5 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 211 மீட்டர்கள் |
ஏற்றம் | 7.2 m (23.6 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,993 |
• அடர்த்தி | 250/km2 (650/sq mi) |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீடு | 606907 |
வாகனப் பதிவு | TN 97 |
ஊராட்சி ஒன்றியம் | போளூர் |
சென்னையிலிருந்து தொலைவு | 165 கி.மீ |
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு | 50 கி.மீ |
வேலூரிலிருந்து தொலைவு | 42 கி.மீ |
ஆரணியிலிருந்து தொலைவு | 22 கிமீ |
போளூரிலிருந்து தொலைவு | 14 கிமீ |
சேத்துப்பட்டிலிருந்து தொலைவு | 39 கிமீ |
கண்ணமங்கலத்திலிருந்து தொலைவு | 22 கிமீ |
இணையதளம் | துரிஞ்சிகுப்பம் ஊராட்சி |
துரிஞ்சிகுப்பம் (Thurinjikuppam Village), தமிழ்நாட்டின் , திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட போளுர் வட்டத்தில் அமைந்துள்ளது இந்த கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற ஆதிபராசக்தி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
நிர்வாகம்
[தொகு]இந்த கிராமம் துரிஞ்சிகுப்பம் ஊராட்சிக்குட்பட்டதாகும் . துரிஞ்சிகுப்பம் ஊராட்சியின் நிர்வாக தலைமையிடம் இங்கு அமைந்துள்ளது. மொத்தம் 9 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது [[1]]. இவற்றில் இருந்து 9 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 9 வார்டுகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.அவை:-
- பிள்ளையார் கோயில் தெரு
- தண்டபாணி கோயில் தெரு
- குசால் பேட்டை மற்றும் கங்கையம்மன் கோயில் தெரு
- வீரக்கோயில் தெரு
- சித்தேரி
- பெரியேரி
- கம்மனந்தல்
- விளக்கனந்தல்
- கொல்லைமேடு
அமைவிடம்
[தொகு]துரிஞ்சிகுப்பம் கிராமம், திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் , துரிஞ்சிகுப்பம் ஊராட்சியில், சவ்வாது மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இதன் கிழக்கே ஆரணி நகரம் 22 கி.மீ தொலைவிலும், தெற்கே போளூர் 14 கி.மீ தொலைவிலும், மற்றும் வடக்கே கண்ணமங்கலம் 22 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
மக்கள் தொகை
[தொகு]2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2993 ஆகும். இவர்களில் பெண்கள் 1343 பேரும் ஆண்கள் 1404 பேரும் உள்ளனர். 2993 மக்கள்தொகை கொண்ட துரிஞ்சிகுப்பம் கிராமம், போளூர் வட்டத்தில் 36 வது அதிக மக்கள் தொகை கொண்ட கிராமமாகும், இது இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தின் போளூர் வட்டத்தில் அமைந்துள்ளது. துரிஞ்சிகுப்பம் கிராமத்தின் மொத்த புவியியல் பரப்பளவு 7 கிமீ 2 ஆகும், இது துணை மாவட்டத்தின் பரப்பளவில் 26 வது பெரிய கிராமமாகும். கிராமத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிமீ 2 க்கு 417 நபர்கள். இந்த ஊராட்சி, போளூர் சட்டமன்றத் தொகுதிக்கும், ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள்
[தொகு]துரிஞ்சிகுப்பம் கிராமத்திலிருந்து சாலை வசதிகள் வலைப்பின்னலாக அமைக்கப்பட்டுள்ளது.
- பெரியேரி - சித்தேரி - துரிஞ்சிகுப்பம் - கேளூர் - வடமாதிமங்கலம் சாலை
- துரிஞ்சிகுப்பம் - விளாங்குப்பம் - முனிவாந்தங்கள் சாலை
- துரிஞ்சிகுப்பம் - ஆத்துவாம்பாடி - கட்டிப்பூண்டி - போளூர் சாலை
- ஆரணியிலிருந்து (தடம் எண்: 6A LSS), கேளூர்,வடமாதிமங்கலம் ரயில் நிலையம், களம்பூர் வழியாக ஒரு நகரப்பேருந்து சேவைகள் உள்ளது.
- அவலூர்பேட்டையிலிருந்து தேவிகாபுரம், போளூர்,குன்னத்தூர், கட்டிப்பூண்டி வழியாக ஒரு நகர பேருந்தும்(தடம் எண்: P2 LSS) குறிப்பிட்ட நேரத்திற்கு பேருந்து சேவைகள் உள்ளது.
- இங்கிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் கூட்டு சாலை கேளூர் சந்தைமேடு எனுமிடத்தில் அமைந்துள்ளது. இந்த கூட்டு சாலைக்கு செல்ல 24 மணி நேரமும் ஆட்டோ வசதியும், குறிப்பிட்ட நேரத்திற்கு பேருந்து வசதிகளும் உள்ளன. NH 234 உடன் இந்த கூட்டு சாலை இணைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை சித்தூர் முதல் கடலூர் வரை (திருவண்ணாமலை - போளூர் - ஆரணி - வேலூர் சாலை) செல்லும் சாலை ஆகும்.
இதனையும் காண்க
[தொகு]- துரிஞ்சிகுப்பம் ஆதிபராசக்தி அம்மன் கோயில்
- அரசினர் உயர்நிலைப்பள்ளி துரிஞ்சிகுப்பம்
- துரிஞ்சிகுப்பம் ஊராட்சி
- சித்தேரி
- பெரியேரி
- கம்மனந்தல்
- விளக்கனந்தல்
- துரிஞ்சிகுப்பம் திரௌபதி அம்மன் கோவில்
- துரிஞ்சிகுப்பம் தண்டு மாரியம்மன் கோவில்
- துரிஞ்சிகுப்பம் முனீஸ்வரன் கோவில்
சான்றுகள்
[தொகு]4. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "District Census Handbook : Tiruvannamalai" (PDF). Census of India. p. 30. பார்க்கப்பட்ட நாள் 21 June 2017.