துரா
துரா | |
---|---|
மாவட்டத் தலைமையிடம் & நகராட்சி | |
வடகிழக்கு இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் துராவின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 25°31′N 90°13′E / 25.52°N 90.22°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேகாலயா |
மாவட்டம் | மேற்கு காரோ மலை மாவட்டம் |
தன்னாட்சி நிர்வாகப் பகுதி | காரோ மலை மாவட்டக் குழு[1] |
ஏற்றம் | 349 - 1,181.10 m (−3,526.0 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 74,858 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | ஆங்கிலம் & காரோ மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 794001 |
தொலைபேசி குறியீடு | 03651 |
வாகனப் பதிவு | ML 08 |
கோப்பென் காலநிலை வகைப்பாடு | ஈரப்பதமான துணை வெப்பமண்டல காலநிலை |

துரா (Tura), வடகிழக்கு இந்தியாவின் மேகாலயா மாநிலத்தின் மேற்கில் உள்ள மேற்கு காரோ மலை மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இது காரோ மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இது மாநிலத் தலைநகரான சில்லாங்கிற்கு தென்மேற்கே 302.7 கிலோமீட்டர் தொலைவிலும்; அசாம் மாநிலத்தின் குவகாத்திற்கு தென்மேற்கே 215.4 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. துரா நகரம் காரோ மொழி பேசும் காரோ மக்களின் பண்பாட்டு நகரம் ஆகும். இந்நகரம் 4 கல்லூரிகள் கொண்டது. இது கடல்மட்டத்திலிருந்து 349 முதல் 1181 மீட்டர் வரை உயரம் கொண்டது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11 வார்டுகளும், 13,743 குடியிருப்புகள் கொண்ட துரா நகரத்தின் மக்கள் தொகை 74,858 ஆகும். அதில் 37,236 ஆண்கள் மற்றும் 37,622 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள்1,010 வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 91.3% ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் பழங்குடிகள் 53,724 ஆக உள்ளனர். இந்து சமயத்தினர் 25.47, இசுலாமியர் 1.18%, கிறித்தவர்கள் 72.71% மற்றும் பிற சமயத்தினர் 0.36% வீதம் உள்ளனர்.[2]
குறிப்பிடத்தக்கவர்கள்
[தொகு]- பி. ஏ. சங்மா - மேகாலயா முதலமைச்சர்
- கான்ராட் சங்மா -மேகாலயா முதலமைச்சர்
தட்ப வெப்பம்
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், துரா, மேகாலயா (1961–1985, extremes 1949–1985) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 31.5 (88.7) |
35.9 (96.6) |
37.2 (99) |
38.5 (101.3) |
39.4 (102.9) |
36.9 (98.4) |
39.1 (102.4) |
36.8 (98.2) |
37.2 (99) |
36.6 (97.9) |
34.0 (93.2) |
30.7 (87.3) |
39.4 (102.9) |
உயர் சராசரி °C (°F) | 22.7 (72.9) |
24.8 (76.6) |
29.0 (84.2) |
30.4 (86.7) |
29.7 (85.5) |
29.1 (84.4) |
28.6 (83.5) |
28.7 (83.7) |
29.0 (84.2) |
28.8 (83.8) |
26.4 (79.5) |
23.3 (73.9) |
27.5 (81.5) |
தாழ் சராசரி °C (°F) | 11.0 (51.8) |
12.7 (54.9) |
16.8 (62.2) |
19.3 (66.7) |
19.4 (66.9) |
20.5 (68.9) |
21.6 (70.9) |
21.5 (70.7) |
21.0 (69.8) |
19.1 (66.4) |
15.6 (60.1) |
12.5 (54.5) |
17.6 (63.7) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 2.5 (36.5) |
5.0 (41) |
6.5 (43.7) |
10.1 (50.2) |
10.6 (51.1) |
10.1 (50.2) |
12.6 (54.7) |
12.6 (54.7) |
12.6 (54.7) |
10.6 (51.1) |
8.1 (46.6) |
4.1 (39.4) |
2.5 (36.5) |
மழைப்பொழிவுmm (inches) | 9.2 (0.362) |
9.3 (0.366) |
52.5 (2.067) |
165.7 (6.524) |
423.7 (16.681) |
555.8 (21.882) |
669.9 (26.374) |
422.4 (16.63) |
345.8 (13.614) |
173.3 (6.823) |
15.0 (0.591) |
3.3 (0.13) |
2,845.9 (112.043) |
% ஈரப்பதம் | 65 | 59 | 56 | 67 | 72 | 80 | 82 | 84 | 82 | 78 | 70 | 68 | 72 |
சராசரி மழை நாட்கள் | 1.0 | 0.6 | 2.8 | 6.5 | 13.6 | 16.0 | 17.7 | 15.5 | 13.2 | 6.3 | 0.8 | 0.2 | 94.2 |
ஆதாரம்: India Meteorological Department[3] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Garo Hills Autonomous District Council
- ↑ Tura Population, Religion, Caste, Working Data West Garo Hills, Meghalaya - Census 2011
- ↑ "Station: Tura Climatological Table 1961–1990" (PDF). Climatological Normals 1961–1990. India Meteorological Department. July 2010. pp. 827–828. Archived from the original (PDF) on 16 February 2020. Retrieved 17 February 2020.