உள்ளடக்கத்துக்குச் செல்

துயில் வாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தூக்க வாதம் அல்லது துயில் வாதம் (sleep paralysis) எனும் இந்நிலையில் தூங்கி முடித்து விழித்தவர்கள் எழுந்திருக்க முயலும் போதும், தூங்க முற்படும் போதும் தாங்கள் அசைய முடியாததை உணர்வார்கள். எவ்வளவோ முயன்றும் கை கால்களை அசைக்க முடியாதிருப்பதைக் காண்பார்கள். இந்த நிலை பொதுவாக விழித்திருத்தலுக்கும் ஓய்விற்கும் இடையிலான ஒரு பரிமாட்றம். பொதுவாக இது சில நிமிடங்களுக்கு மட்டுமே இருக்கும். ஒவ்வொரு மனிதரும் தன் வாணாளில் ஒரு முறையேனும் இந்நிகழ்வை உணர்ந்திருப்பர்.

உறக்கம் ஐந்து நிலைகள் கொண்டது. முதல் நிலை, மேலோட்டமான உறக்கம். இதில் இருந்து எளிதாக எழுந்து விட முடியும்.

இரண்டாவது நிலையில், இதயத் துடிப்பு குறைந்து உடலின் வெப்பம் குறையும்.

மூன்றாவது மற்றும் நான்காவது நிலைகளில், திசுக்கள் மற்றும் தசைகள் சீர் செய்யப்படும் ஆழ்ந்த உறக்க நிலையில் இருக்கும் போது யாரையாவது எழுப்பினால் கடித்து விடும் அளவுக்கு கடுப்பாக இருப்பார்.

ஐந்தாவது நிலை தான் REM எனப்படும் கனவுகள் காணும் நிலை. இந்த நிலையில் தான் பகல் பொழுதில் சேகரித்த அப்போது பொருள் விளங்காத (அ) பொருள் அற்றதாக கருதிய தகவல்களை கவிழ்த்து போட்டு மூளை மும்முரமாக jigsaw விளையாடி கொண்டிருக்கும். அதாவது கனவு கண்டு கொண்டிருக்கும் இந்த நிலையில், உறக்கத்திலேயே எழுந்து நடந்து போனால் ஆபத்து ஏற்படலாம் என்பதால் தசைகளை மூளை முடக்கி விடும். இந்த நிலையில் மூளையால் சுற்றி என்ன நடக்கிறது என்று உணர முடியாது.

இந்த நிலையில் விழித்தால் தான் முடக்கிய தசைகளை மூளை மீண்டும் செயல்படுத்த 2 நிமிடங்கள் ஆகும். இந்த 2 நிமிடங்களில் கண்கள் திறந்திருப்பதாலும் ஒரு பக்கம் கனவு ஓடிக்கொண்டிப்பதாலும் நிஜம் எது கனவு எது என்று அறியாமல், கனவுகள் அனைத்தும் நிஜத்தில் நடப்பது போன்ற‌ மாயை உருவாகும். எழ நினைத்தால் எழவும் முடியாது. இதற்கு பெயர் தான் sleep paralysis.

இந்த மொத்த நிகழ்விலும் பிழை ஒன்றே ஒன்று தான். முழுமையான தூக்கம் இல்லாமல் முன்கூட்டியே எழ முயற்சிப்பது.


காரணங்கள்

[தொகு]
  • மெலடோனின் (melatonin) அளவு குறைவதால் தடைபடும் தசையியக்க முடுக்கம்
  • மூளையின் பான்ஸ் பகுதியில் உள்ள நரம்புகள் தடைபடுதல்

காரணிகள்

[தொகு]
  • முறையற்ற துயிற் பழக்கம்
  • மன அழுத்தம்
  • திடீர் வாழ்க்கை முறை மாற்றங்கள்

துயில் வாதம் நீங்க பயிற்சிகள்

[தொகு]
   5 நிலைகள் கொண்ட தூக்க சுழற்சி நடைபெற 90 நிமிடங்கள் ஆகும். இம்மாதிரியான 5 சுழற்சிகள் கொண்டது தான் முழுமையான உறக்கம். முழுமையான தூக்கம் பெற குறைந்தது 7.5 மணிநேரம். (அதிக பட்சம் 9 மணிநேரம்)
   
   உறங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பில் இருந்து தொலைக்காட்சி, திறன் பேசி போன்ற எண்ணிம திரைகளை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.உறங்கும் அறையில், அறைகுறை வெளிச்சத்திலோ பாதி உறக்கத்திலோ பார்த்து பயப்பட கூடிய பொருட்களை வைக்க வேண்டாம். பேய் பிசாசு த்ரில்லர் கொலை திரைப்படங்களை பார்ப்பதை தவிருங்கள்.
   
   சிலருக்கு sleep paralysisஇன் போது நெஞ்சின் மேல் யாரோ/எதுவோ உட்கார்ந்து மூச்சுத்திணறல் ஏற்படுத்துவது போல தோன்றும். இதை தவிர்க்க, விட்டத்தை பார்த்து படுப்பது எவ்வளவு சுகமாக இருந்தாலும் இடது புறமாக திரும்பி படுத்து உறங்குங்கள். இந்த பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள சட்டையின் முதுகு பகுதியில் பந்து வைத்து கொள்ளலாம். இந்த நிலையில் உறங்கும் பெண்கள், கால் இடுக்கில் தலையணை வைத்துத் தூங்கினால் இடுப்பு வலி வராது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துயில்_வாதம்&oldid=3531886" இலிருந்து மீள்விக்கப்பட்டது