தீரஜ் பிரசாத் சாகு
Appearance
தீரஜ் பிரசாத் சாகு | |
---|---|
மாநிலங்களவை உறுப்பினர், ஜார்க்கண்டு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 4 மே 2018 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 23 நவம்பர் 1959 லோகர்தகா, ஜார்க்கண்டு, இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பெற்றோர் |
|
உறவினர் | சிவபிரசாத் சாகு (சகோதரர்) |
முன்னாள் மாணவர் | மார்வாரி கல்லூரி, ராஞ்சி |
தீரஜ் பிரசாத் சாகு (Dhiraj Prasad Sahu) (பிறப்பு:23 நவம்பர் 1959), இந்தியாவின் ஜார்க்கண்டு மாநில இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதியும், மாநிலங்களவை உறுப்பினரும்[1], தொழிலபதிபரும் ஆவார். இவர் தற்போது மூன்று முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பதவியில் உள்ளார்.[2]
2023 வருமான வரி சோதனைகள்
[தொகு]மதுபான உற்பத்தி தொழிற்சாலைகள் நடத்தி வரும் தீரஜ் பிரசாத் சாகுவிற்கு சொந்தமான ஒடிசா மற்றும் ஜார்க்கண்டு மாநிலங்களில் டிசம்பர் 2023ல் வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனை நடததியதில், தற்போது வரை ரூபாய் 350 கோடிக்கு மேல் ரொக்கப் பணம் கைப்பற்றியுள்ளனர்.[3]ஐந்து நாட்களைத் தாண்டி சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விமர்சனங்கள்
[தொகு]இந்திய தேசிய காங்கிரசு கட்சியை குறி வைத்து தாக்குவதற்காக இது போன்ற நடவடிக்கைகள் பாரதிய ஜனதா கட்சி மேற்கொள்கிறது என காங்கிரசு கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர்.[4]