தீபா தாஸ்முன்சி
தீபா தாஸ்முன்சி என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 15 வது மக்களவையில் ராய்கஞ்ச் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். அக்டோபர் 2012 முதல் மே 2014 வரை நகர்ப்புற வளர்ச்சிக்கான மாநில அமைச்சராக இருந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பிரிய ரஞ்சன் தாஸ்முன்சியின் மனைவியாவார்.
சொந்த வாழ்க்கை
[தொகு]தாஸ்முன்சி 15 ஜூலை 1960 அன்று மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெனாய் கோஷ் மற்றும் துர்கா கோஷ் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். கொல்கத்தாவில் உள்ள ரவீந்திர பாரதி பல்கலைக்கழகத்தில் பயின்ற இவர் நாடகவியலில் எம்.ஏ. பட்டம் பெற்றார்.
15 ஏப்ரல் 1994 அன்று பிரிய ரஞ்சன் தாஸ்முன்சியை மணந்த இவருக்கு ஒரு மகன் உள்ளார்.[1]
பிரிய ரஞ்சன் தாஸ்முன்சி 2017 ஆம் ஆண்டு இறந்தார்.
வகித்த பதவிகள்
[தொகு]1. 2006-2009 உறுப்பினர், கோல்போக்கரின் மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினர்
2. 2009-2014 ராய்கஞ்ச் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் 15வது மக்களவை உறுப்பினர்
3. 31 ஆகஸ்ட் 2009 - உறுப்பினர், பணியாளர், பொதுக் குறைகள், சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்றக் குழு
4. 28 அக்டோபர் 2012 - நகர்ப்புற வளர்ச்சிக்கான மத்திய அமைச்சர்
கலைத் துறைப் பங்களிப்புகள்
[தொகு]1984 ஆம் ஆண்டு முதல் மேடைக் கலைஞராக பங்களிப்பு செய்த இவர் தொலைக்காட்சி கலைஞர், ஆடை வடிவமைப்பாளர், கலை இயக்குனர் (தொலைக்காட்சி தொடர் மற்றும் குறும்படங்கள்) ஆகிய கலைத் துறைப் பங்களிப்பாளராக இருந்தார்.[2]
விளையாட்டு மற்றும் கழகங்கள்
[தொகு]டெல்லி பெண்கள் கால்பந்துக் கழகத்தின் தலைவராக இருந்தார்.[2]
பிற தகவல்கள்
[தொகு]முதுநிலைப் பட்டப்படிப்பில் தங்கப் பதக்கம் வென்றவர். நாடகத்துறையில் பல விருதுகளைப் பெற்றார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "loksaba members". 164.100.47.132. Archived from the original on 28 February 2014. பார்க்கப்பட்ட நாள் 24 February 2014.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Members : Lok Sabha".