தி கிரேட் டிரெயின் ராபரி
தி கிரேட் டிரெயின் ராபரி | |
---|---|
![]() படத்திற்கான விளம்பர துண்டுப் பிரசுரத்தின் அட்டைப்படம் | |
இயக்கம் | எட்வின் எஸ். போர்ட்டர் |
நடிப்பு | ஜஸ்டஸ் டி. பார்ன்ஸ் ஜி.எம். ஆண்டர்சன் வால்டர் கேமரூன் |
ஒளிப்பதிவு | எட்வின் எஸ். போர்ட்டர் ஜே. பிளேயர் ஸ்மித் |
விநியோகம் | எடிசன் மேனுபேக்சரிங் கம்பெனி |
வெளியீடு | திசம்பர் 1903 |
ஓட்டம் |
|
நாடு | அமெரிக்கா |
மொழி | ஊமைத் திரைப்படம் ஆங்கில இடைத் தலைப்புகள் |
தி கிரேட் டிரெயின் ராபரி (The Great Train Robbery) என்பது 1903 ஆண்டு எடிசன் மேனுஃபேக்சரிங் கம்பெனிக்காக எட்வின் எஸ். போர்ட்டரால் தயாரிக்கப்பட்ட ஒரு அமெரிக்க ஊமைத் திரைப்படமாகும். இது அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு தொடருந்து நிலையத்தில் ஒரு நீராவி ரயிலை பிடித்து கொள்ளையடிக்கும் கொள்ளைக் கும்பலைப் பின்தொடர்கிறது. கொள்ளையர்கள் ஒரு மலைப்பாங்கான நிலப்பரப்பு வழியாக தப்பி ஓடுகிறன்றனர். இறுதியில் உள்ளூர்வாசிகளால் வீழ்த்தபடுகின்றனர். இது ஸ்காட் மார்பிள் இதே பெயரில் எழுதி மேடையில் நிகழ்த்தபட்டுவந்த நாடகத்தை அடிப்படையாக கொண்ட ஒரு குறும்படம் ஆகும்.
1903 நவம்பரில் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சியில் போர்ட்டர் படத்தை மேற்பார்வையிட்டு படப்பிடிப்பு நடத்தினார்; எடிசன் ஸ்டுடியோ அடுத்த மாதத்தில் வாட்வில் அவுஸ் மற்றும் பிற இடங்களுக்கு படப் பிரதிகளை விற்கத் தொடங்கியது. இப்படத்தில் நடித்தவர்களில் ஜஸ்டஸ் டி. பார்ன்ஸ், ஜி.எம். ஆண்டர்சன் ஆகியோர் அடங்குவர், அவர்களும் திட்டமிடல் போன்றவற்றில் உதவியிருக்கலாம். போர்ட்டரின் கதை சொல்லும் முறை, 1903 இல் புதுமையானதாகவோ அல்லது வழக்கத்திற்கு மாறானதாகவோ இல்லை என்றாலும், ஒரு கதையைச் சொல்ல பலவித ஒளிப்படமிக் கோணங்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட பல பிரபலமான நுட்பங்களைச் சேர்த்து திரையனுபவத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். கதையுடன் தொடர்பில்லாத ஒரு சிறப்பு குளோசப் காட்சியைக் கொண்டு படத்தைத் தொடங்கலாம் அல்லது முடிக்கலாம் என்பதைக் காட்டினார். படத்தில் பார்ன்ஸ், ஒரு கொள்ளைக் கூட்டத் தலைனாக தனது துப்பாக்கியை நேரடியாக ஒளிப்படமியை நோக்கிச் சுட்டு படத்தை முடிப்பதாகக் காட்டினார்.
சாகசக் கதை மற்றும் வன்முறை காரணமாக, கிரேட் டிரெயின் ராபரி அதற்கு முன் முன்னோடி இல்லாத வணிக வெற்றியாக இருந்தது. இது மேற்கத்திய திரைப்பட வகையை குறிப்பிடத்தக்க அளவு பாதிக்கவில்லை அல்லது முன்னேற்றவில்லை என்றாலும், இது போர்ட்டரால் ஒரு பகடி படம் உட்பட பலமுறை மீண்டும் படமாக்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டில், தி கிரேட் டிரெயின் ராபரி படமானது யுனைடெட் ஸ்டேட்ஸ் நேஷனல் ஃபிலிம் ரெஜிஸ்ட்ரியில் பாதுகாப்பதற்காக அமெரிக்கக் காங்கிரசு நூலகத்தால் "பண்பாட்டு ரீதியாக, வரலாற்று ரீதியாக அல்லது அழகியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக" தேர்ந்தெடுக்கப்பட்டது.
கதை
[தொகு]இரண்டு கொள்ளையர்கள் ஒரு இரயில்வே தந்தி அலுவலகத்துக்குள் நுழைகின்றனர். அங்கு அவர்கள் அலுவலரை துப்பாக்கி முனையில் மிரட்டி தொடருந்தை நிறுத்த உத்தரவிடச் செய்கிறனர். மேலும் நிலையத்தின் தண்ணீர்த் தொட்டியில் இருந்த தீரைக் கொண்டு நீராவி என்ஜினினின் தண்ணீர் தொட்டியை நிரப்புமாறு அதன் பொறியாளருக்கு உத்தரவிடவைக்கின்றனர். பின்னர் அலுவலரைக் அங்கேயே கட்டிப்போட்டுவிடுகின்றனர். தொடருந்து புறப்படுகிறது, இரண்டு கொள்ளையர்கள் தொடருந்தில் விலை மதிப்புள்ள பொருட்களை வைக்கும் பெட்டியில் ஏறுகின்றனர். அங்கு உள்ள பெட்டகத்தை வெடி வைத்து தகர்த்து திறக்கின்றனர். மற்றவர்கள் தொடருந்து எஞ்சினில் கரியள்ளிப் போடும் பணியாளரைக் கொல்கின்றனர். மேலும் ரயிலை நிறுத்தி அதன் என்ஜினுடன் இணைக்கபட்டுள்ள பயணிகளின் பெட்டிகளை கழற்றிவிடுமாறு பொறியாளரை கட்டாயப்படுத்துகின்றனர். பின்னர் கொள்ளைக்காரர்கள் பயணிகளை ரயிலில் இருந்து மிரட்டி இறக்கி, துப்பாக்கி முனையில் நிறுத்தி அவர்களின் உடமைகளைப் பறிக்கின்றனர். தப்பிக்க முயற்சிக்கும் ஒரு பயணி கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்படுகிறார். பின்னர் கொள்ளையர்கள் இரயில் என்ஜினில் தப்பிக்கிறனர்.
கை கால்கள் கட்டபட்ட தந்தி அலுவலர் விழித்தெழுகிறார், ஆனால் மீண்டும் சரிந்துவிழுந்துவிடுகிறார். அவரது மகள் வந்து, அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை சுயநினைவுக்கு கொண்டுவருகிறாள். ஒரு நடன மண்டபத்திற்கு செல்லும் கொள்ளையர்கள் அங்கு பெண்களுடன் நடனமாடிக் களிக்கின்றனர். ஒரு கதவு திடீரென்று திறக்கப்படுகிறது தந்தி அலுவலர் கொள்ளை குறித்து தெரிவிக்க விரைகிறார். கொள்ளையர்களால் பாதிப்புற்ற ஆண்கள் விரைவாக ஒரு குழுவாகச் சேர்ந்து கொள்ளைக்காரர்களை மலைகள் வழியாகத் துரத்துகின்றனர். இறுதியில் கொள்ளையர்கள் அனைவரையும் கொன்று கொள்ளைப் பொருட்களை மீட்டெடுக்கிறனர்.
இறுதிக் காட்சியாக கொள்ளைக் கூட்டத் தலைவன் தனது கைத்துப்பாக்கியைக் கொண்டு பார்வையாளர்களை (ஒளிப்படமியை) நோக்கி சுடுகிறார். அத்துடன் படம் முடிகிறது.
-
1. ரயில் தந்தி அலுவலகத்தின் உட்புறம்
-
2. ரயில்வே தண்ணீர் தொட்டி
-
3. விரைவுப் பெட்டியின் உட்புறம்
-
4. கரியள்ளிப் போடிவனுடன் போராட்டம்
-
5. பெட்டிகள் கழட்டிவிடப்படுதல்
-
6. பயணிகள் பெட்டிகளின் வெளிப்புறம்
-
7. தப்பித்தல்
-
8. மலைப்பகுதியில் தப்பிச் செல்லுதல்
-
9. ஒரு பள்ளத்தாக்கில் அழகான காட்சி
-
10. தந்தி அலுவலகத்தின் உட்புறம்
-
11. நடன மண்டபத்தின் உட்புறம்
-
12. விரட்டல் காட்சி
-
13. மரணப் போர்
-
14. முடிவு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pratt 1973, ப. 35–36.