திரையன்
Appearance
தொண்டைநாட்டு மன்னன் திரையன்.
“தொண்டை நாடு சான்றோர் உடைத்து” என்பர். சான்றோர் தொண்டுள்ளம் படைத்தவர். தொண்டுள்ளம் படைத்தவர் வாழும் நாடு தொண்டைநாடு. தொண்டைநாட்டு அரசன் திரையன். நாகநாட்டிலிருந்து கடல்-திரையில் மிதந்து வந்த பிள்ளை ஆதலால் திரையன் எனப்பட்டான் என அறிஞர்கள் உய்த்துணர்கின்றனர்.
தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பாட்டு பெரும்பாணாற்றுப்படை. இந்தப் பாடலில் இவன் பல்வேல் திரையன் எனப் போற்றப்படுகிறான்.[1]
இந்தப் பாட்டுக்குப் பிற்காலத்தில் எழுதிச் சேர்க்கப்பபட்ட வெண்பாவில் “கான் பயந்த கண்ணிக் கடுமான் திரையன்” எனப் போற்றப்பட்டுள்ளான்.
- வேங்கட நாட்டு அரசன்
- இந்தத் திரையன் திருவேங்கடமலைப் பகுதி நாட்டுக்கு அரசன்.[2]
- பவத்திரி தலைநகர்
- பொலம்பூண் திரையன் எனப் போற்றப்பட்ட இந்தத் திரையன் பவத்திரி என்னும் ஊரில் இருந்துகொண்டு செங்கோலோச்சி வந்தான்.[3]
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ மலர்தலை உலகத்து மன்னுயிர் காக்கும் முரசு முழங்கு தானை மூவருள்ளும் இலங்குநீர்ப் பரப்பின் வளை மீக்கூறும் வலம்புரி அன்ன வசை நீங்கு சிறப்பின் அல்லது கடிந்த அறம் புரி செங்கோல் பல்வேல் திரையன் - பெரும்பாணாற்றுப்படை 37
- ↑ வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை - காட்டூர் கிழார் மகனார் கண்ணனார் பாடல் அகம் 85-9
- ↑ செல்லா நல்லிசை பொலம்பூண் திரையன் பவத்திரி அன்ன நலம் - நக்கீரர் பாடல் அகம் 340-6