திரேசிய மதம்
திரேசிய மதம் என்பது திரேசியர்களின் தொன்மவியல், சடங்கு நடைமுறைகள் மற்றும் நம்பிக்கைகளை உள்ளடக்கியது. இது பழங்காலத்தில் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஐரோப்பா மற்றும் வடமேற்கு அனடோலியாவில் வசித்து வந்த நெருங்கிய தொடர்புடைய பண்டைய இந்திய-ஐரோப்பிய மக்களின் தொகுப்பாகும். திரேசியர்கள் தங்கள் சடங்குகளை விவரிக்கும் விரிவான நூல்கள் எதையும் விட்டு செல்லவில்லை. ஆனால் அவர்களின் நம்பிக்கைகள் பற்றிய தகவல்கள் கல்வெட்டியல் ஆதாரங்கள் மற்றும் பண்டைய கிரேக்க எழுத்துக்கள் மூலம் கிடைக்கின்றன. இது பிற்பகுதியில் திரேஸில் சூரிய வழிபாட்டுடன் இணைந்து ஒரே தெய்வமாக ஒன்றிணைந்தன.
தோற்றம்
[தொகு]திரேசிய மதம் குறிப்பாக அதன் படைப்புக் கதை இந்திய-ஐரோப்பிய மக்களின் மதத்திலிருந்து பெறப்பட்டது.[1] திரேசிய கருத்தாக்கம் உலகம் நான்கு கூறுகளால் (காற்று, பூமி, நெருப்பு, நீர்) ஆனது என்று நம்பியது. இது ஆரம்பகால வெண்கல யுகத்திலிருந்து (கிமு நான்காம் மில்லினியத்தில்) இயற்றப்பட்ட கவிதைகள் மற்றும் பாடல்களில் பதிவு செய்யப்பட்டது. கிமு 2 ஆம் மில்லினியத்தின் பிற்பகுதியில் வெண்கல யுகத்தின் பிற்பகுதியில் வாய்வழியாக கூறப்பட்டது.[2] வெண்கல யுகத்தின் முடிவில், சூரிய வழிபாட்டு முறை பரவலாக இருந்தது. தினசரி உபயோகப் பொருட்களும் கலையும் சூரியனின் சின்னங்களால் அலங்கரிக்கப்பட்டன, மேலும் சூரியனின் பிரதிநிதித்துவங்கள் பாறைகளில் செதுக்கப்பட்டன.[2][1]
வெண்கல யுகத்தின் பிற்பகுதி வடக்கு கிரேக்கம் மற்றும் மற்றும் ஆசியா இடையே கணிசமான கலாச்சார தொடர்புகள் இருந்த காலகட்டமாகும். இந்த கலாச்சார தொடர்பு திரேஸில் உள்ள தாய் தெய்வத்தின் மீதான நம்பிக்கை போன்ற குறிப்பிடத்தக்க மத பரிமாற்றங்களுக்கு வழிவகுத்தது. கி.மு. 2 ஆம் மில்லினியத்தின் பிற்பகுதியிலும், கி.மு 1 ஆம் மில்லினியத்தின் முற்பகுதியிலும் பரிணாம வளர்ச்சியுடன், பெரிய தாய் தேவியின் நம்பிக்கை பரவியது. இது திரேஸில் மெகாலிதிக் கலாச்சாரத்தின் சமகாலத்தில் செழிப்புடன் இருந்தது. இந்த மெகாலிதிக் கலாச்சாரத்தின் நினைவுச்சின்னங்கள, அதாவது செவ்வக வடிவ பாறைகள், பரிசு தொட்டிகள், தியாகங்களுக்கான தளங்கள், நீரூற்றுகள், சரணாலயங்கள், வளாகங்களுக்கு புனிதமான படிகள். மெகாலிதிக் கட்டமைப்புகள் மற்றும் டால்மன்கள் என்று பல உள்ளன.[1] வெண்கல யுகத்தின் பிற்பகுதியிலும் இரும்புக் காலத்தின் ஆரம்ப காலத்திலும், பால்கன் தீபகற்பத்தில் சமூக நெருக்கடியின் போது அனடோலியாவிலிருந்து த்ரேஸ் வரை சாக்ரசு (டயோனிசசு) வழிபாட்டு முறை பரவியது. சாக்ரசு வழிபாட்ட முறை உள்ளூர் சூரிய வழிபாட்டு முறைகளின் பயிற்சியாளர்களால் ஆரம்பத்தில் எதிர்க்கப்பட்ட போதிலும், அது இறுதியில் திரேஸில் நிலைநிறுத்தப்பட்டது, அதன் பிறகு அது சூரிய வழிபாட்டுடன் இணைந்தது மற்றும் சூரியன் மற்றும் மற்ற தெய்வங்கள் ஒரே தெய்வமாக ஒன்றிணைந்தன.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Fol et al. 1998, ப. 86-91.
- ↑ 2.0 2.1 2.2 Fol & Marazov 1977, ப. 17-36.
குறிப்புகள்
[தொகு]- Fol, Alexander; Tacheva, Margarita; Venedikov, Ivan; Marazov, Ivan (1998). Marazov, Ivan (ed.). Ancient Gold: The Wealth of the Thracians: Treasures from the Republic of Bulgaria. New York City: Harry N. Abrams, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-882-50706-1.
- Duridanov, Ivan (1985). Die Sprache der Thraker [The Language of the Thracians] (in ஜெர்மன்). Hieronymus Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-888-93031-7.
- Fol, Alexander; Marazov, Ivan (1977). Thrace & the Thracians. New York City: St. Martin's Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-304-29880-8.
- Dimitrov, Peter A. (2009). Thracian Language and Greek and Thracian Epigraphy. Cambridge Scholars Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-443-81600-7.
- Ustinova, Yulia (1999). The Supreme Gods of the Bosporan Kingdom: Celestial Aphrodite and the Most High God. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-004-11231-5.