திருவண்ணாமலை கால்நடைச் சந்தை
திருவண்ணாமலை கால்நடைச் சந்தை என்பது தமிழ்நாட்டின், திருவண்ணாமலையில் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு வாரம் நடைபெறும் கால்நடை சந்தையாகும். இது கார்த்திகை தீப விழாவை ஒட்டி ஆண்டுதோறும் நடக்கிறது. இந்தச் சந்தை நூற்றாண்டுகளாக நடத்தபட்டு வருவதாக தெரிகிறது.
பல்வேறு வகைகளைச் சார்ந்த மாடுகள், குதிரைகள், ஆடுகள், மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் போன்றவை இச்சந்தைக்குக் கொண்டு வரப்படுகின்றன.[1] மாடுகள், குதிரைகள் போன்றவற்றுக்குத் தேவைப்படும் கயிறு, மணி போன்றவற்றை விற்க தற்காலிகக் கடைகள் சந்தைக்கு அருகில் அமைக்கப்படுகின்றன.[2] இன்றைக்கு மாடுகள், குதிரைகள் போன்றவற்றை வெளியூர்களிளிருந்து கொண்டு வருவதற்கு மோட்டார் வாகனங்களைப் ( சுமையுந்து, உழுவை ஊர்தி,) பயன்படுத்துகின்றனர். மோட்டார் வாகனங்களின் வருகைக்கு முன்பு பல்வேறு ஊர்களிலிருந்து தங்கள் கால்நடைகளை பல நாட்கள் கால்நடையாகவே நடத்தி வந்து விற்பனை செய்திருப்பதை அறிய முடிகிறது
பயண வழி
[தொகு]பெரும்பாலும் தென்மாவட்டங்களைச் சார்ந்தவர்கள் காட்டுமன்னார்குடி - கம்மாபுரம் - எலவனாசுர்பேட்டை புகைப் பட்டி - திருக்கோயிலூர் - மாத்தூர் வழியாக திருவண்ணாமலையை வந்தடைந்தார்கள்.
சந்தை வியாபாரிகளின் வழக்கம்
[தொகு]இவர்களின் பயணத்தின் பொழுது அவர்களுடன் குதிரையினை அலங்காரம் செய்வதற்குரிய பொருட்கள், மாற்று உடை, சமையல் பாத்திரங்கள், அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் அனைத்தையும் ரேக்ளா வண்டியின் அடியில் வைத்துக் கொண்டு வருகின்றனர். வழியில் ஓய்வெடுக்கும் இடங்களிலேயே உணவு சமைத்து உண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Correspondent, Vikatan (2014-12-08). "தொன்றுதொட்டு தொடரும் பாரம்பரியம்… கால்நடைச் சந்தை!".
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help) - ↑ மலர், மாலை (2024-07-13). "53 ஆண்களை மயக்கி வலையில் வீழ்த்திய பெண்".
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help)