திருமணம் பற்றிய பெரியார் ஈ.வெ.இரா வின் கருத்துக்கள்
![]() | இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி பெரியாரியல் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
![]() | இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
பெரியார் ஈ.வெ.இரா திருமணம் குறித்து சமகாலத்து முறைகளுக்கு மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தார். சமூக நீதிக்காகவும் பெண் விடுதலைக்காகவும் பாடுபட்டவர். தமிழ்நாட்டில் சுயமரியாதை திருமணத்தை அறிமுகப்படுத்தியவர்.
பகுத்தறிவுத் திருமணம்
[தொகு]இன்ன அவசியத்திற்கு, இன்ன காரியம் செய்கிறோம் என்று அறிந்து கொள்ளாமலும், அறிய முடியாமலும் இருக்கும்படியான காரியங்களைச் (சடங்குகளை) செய்யாமல் நடத்தும் திருமணம் பகுத்தறிவுத் திருமணம் ஆகும்.
சுதந்திரத் திருமணம்
[தொகு]சுதந்திரத் திருமணம் என்பது மணமக்கள் தாங்களாகவே ஒருவரை ஒருவர் நன்றாக அறிந்து திருப்தி அடைந்து காதலித்து நடத்தும் திருமணம் ஆகும்.
புரட்சித் திருமணம்
[தொகு]புரட்சித் திருமணம் என்பது தாலி கட்டாமல் செய்யும் திருமணம் ஆகும்.
சிக்கனத் திருமணம்
[தொகு]சிக்கனத் திருமணம் என்பது ஆடம்பர காரியங்கள் தவிர்க்கப்பட்டு சுருங்கின செலவில், குறுகிய நேரத்தில் நடத்துவது ஆகும்.
சுயமரியாதைத் திருமணம்
[தொகு]சுயமரியாதைத் திருமணம் என்பது பார்ப்பனரைப் புரோகிதராக வைத்து நடத்தாத திருமணம் ஆகும்.[1][2]