திருக்குறளின் பல்வேறு பெயர்கள்
திருக்குறள் அல்லது குறள் என்று அழைக்கப்படும் நன்னெறி நூலானது அஃது எழுதப்பட்ட காலம் முதல் அறிஞர்களாலும், பொதுமக்களாலும் பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டுகிறது. "முப்பால்" என்று ஆரம்பத்தில் பொதுவாகப் குறிப்பிடப்பட்டாலும் அதன் ஆசிரியராய் அறியப்படும் திருவள்ளுவர் எந்தப் பெயரையும் வைக்காமல் வாழ்க்கை நெறிகளையும் சமூக நெறிகளையும் ஈரடி கொண்ட குறளாக இயற்றியுள்ளார். இந்நூல் சுமார் 44 பெயர்களில் அழைக்கப்படுவதாகவும், சில அறிஞர்கள் மேலும் சில பெயர்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.[1][2] திருக்குறளைப் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்தவரான 19-ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த அறிஞர் திரு. ஏரியல் என்பவர் இந்த நூலில் ஆசிரியர் பெயர் குறிப்பிடவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
சொற்பிறப்பியல்
[தொகு]'அறம்', 'பொருள்', 'இன்பம்' என மூன்று பிரிவுகளாகப் பிரித்துப் பாடப்பட்டதால் 'முப்பால்' [3] என ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டது. தொல்காப்பியம், தமிழ் கவிதை இலக்கியத்தைக் "குறுவெண்பாட்டு"," நெடுவெண்பாட்டு" என இரு பிரிவாகப் பிரித்துள்ளது. குறுவெண்பாட்டு என்பது குறள் பாட்டு எனவும் பின்னர்க் குறள் எனவும் அழைக்கப்பட்டது.[4] இரு அடிகளைக் கொண்ட குறளில், முதலடி நான்கு வார்த்தைகளைக் (சீர்) கொண்டதாகவும் இரண்டாம் அடி மூன்று சீர்களைக் கொண்டதாகவும் "வெண்பா" இலக்ககணத்திற்குட்பட்டதாகவும் அமைந்திருக்கும். குறளானது தமிழ்க் கவிதை வடிவங்களில் முக்கியமான ஒன்றாகும். தெய்வீகத்தன்மை காரணமாகத் திரு என்ற அடைமொழியுடன் 'திருக்குறள்' என அழைக்கப்படுகிறது. வாழ்வியல் நெறிகள், தத்துவங்கள், சிறப்புகள் எனப் பல்வேறு கருத்துகளைக் எக்காலத்திற்கும் பொருந்துமாறு குறள் கொண்டுள்ளது.
அடைமொழிகளின் அட்டவணை
[தொகு]கடந்த பல வருடங்களாக இந்நூலைப் பற்றித் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்படும் அடைமொழிகளின் அட்டவணை.[3][5][6][7]
வரிசை எண். | பெயர் | பொருள் | பெயரிட்டவர் | பெயரிடப்பட்ட நூல் | குறிப்பு | |
---|---|---|---|---|---|---|
1 | முப்பால் | மூன்று பிரிவுகளைக்கொண்ட நூல் | வள்ளுவர் (நூலாசிரியர்)[8] | திருவள்ளுவ மாலை | முதன்மையான பெயர்.[6] வள்ளுவராலேயே நூலை இயற்றும் போது இந்தப் பெயரிட்டதாக நம்பப்படுகிறது. திருவள்ளுவ மாலையில் 15 முறை குறிப்பிடப்பட்டுள்ளது.( 9, 10, 11, 12, 15, 17, 18, 19, 30, 31, 39, 44, 46, 49, 53) [9] | |
2 | திருக்குறள் | புனிதமான குறள் | கபிலர்[2] | திருவள்ளுவ மாலை | 12 பழமையான பெயர்களில் ஒன்று. [6] .பெரும்பான்மையான மக்களால் இன்றளவும் உபயோகப்படுத்தப்படுகிறது. | |
3 | அறம் | அழதூர் கிழார்[1] | புறநானூறு, வசனம் :34 (அனோ டொமினி 1–5 ஆம் நூற்றாண்டு ) | அறத்தை அடிப்படையாகக் கொண்டு பாடப்பட்டதால் இப்பெயர் பெற்றது. | ||
4 | குறள் | குறள் | பெரும்பான்மையான மக்களால் இன்றளவும் உபயோகப்படுத்தப்படும் இரண்டாவது பெயர் | |||
5 | தெய்வ நூல், தெய்வமாமறை | தெய்வத்தன்மை கொண்ட நூல் | 12 பழமையான பெயர்களில் ஒன்றான இப்பெயர் [6] சோதாசவாதனம் சுப்பராய செட்டியாரால் [10] பயன்படுத்தப்பட்டது. | |||
6 | திருவள்ளுவர் வள்ளுவர் |
திருவள்ளுவர் | பாரம்பரியம் | 12 பழமையான பெயர்களில் ஒன்று.[6] "கருத்தாகுபெயர்" இடும் நூல் வழக்கப்படி அதன் நூலாசிரியரைக் கொண்டு இப்பெயர் பெற்றது.[10] சுவாமிநாத தேசிகரால் திருவள்ளுவர்-உம், உமாபதி சிவாச்சாரியாரால் "வள்ளுவர்"-உம் பெயர் பெற்றன.[11] | ||
7 | பொய்யாமொழி | என்றும் தவறாத | வெள்ளிவீதியார் | திருவள்ளுவமாலை, வசனம்-23[12] | 12 பழமையான பெயர்களில் ஒன்று.[6] | |
8 | வாயுறை வாழ்த்து | மதுரை அருவை வணிகன் இளவெட்டனார் |
திருவள்ளுவ மாலை, வ்சனம்-35[13] | 12 பழமையான பெயர்களில் ஒன்று.[6] | ||
9 | தமிழ் மறை | தமிழ் வேதநூல் | 12 பழமையான பெயர்களில் ஒன்று.[6] சிவசிவ வெண்பா எனும் நூலில் தியாகராச செட்டியார் பயன்படுத்தியுள்ளார்.[14] | |||
10 | பொது மறை | பொதுவான நூல் | பாரம்பரியம்[12] | 12 பழமையான பெயர்களில் ஒன்று[6] | ||
11 | தமிழ்மனு நூல் | தமிழின் வாழ்வியல் நூல் | பாரம்பரியம் | பரிமேலழலகரின் உபயோகம் (c. 13-ஆம் நூற்றாண்டு CE) | 12 பழமையான பெயர்களில் ஒன்று.[6] | |
12 | திருவள்ளுவப் பயன் வள்ளுவப்பயன் |
திருவள்ளுவரின் பங்களிப்பு | யாப்பருங்காலகாரிகை 40 உரை | 12 பழமையான பெயர்களில் ஒன்று.[6] நச்சினார்க்கினியார், பெருந்தேவனார் குணசேகரார் பயன்படுத்தியுள்ளனர்.[10] | ||
13 | பொருளுரை | அர்த்தமுள்ள எழுத்து | சீத்தலை சாத்தனார் | மணிமேகலை, வசனம்-22:61[12] | ||
14 | முதுமொழி பழமொழி |
பழமையான மொழிகள் | நரிவெரூ தலையர் | திருவள்ளுவ மாலை, வசனம்- 33[12] | [12] அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ் மற்றும் சிவசிவ வெண்பாவில் "முதுமொழி" என இயம்ப பட்டுள்ளது.[10] | |
15 | இரண்டு | இரண்டடி | பெருந்தொகை, verse 1128[15] | |||
16 | முப்பானூல் | மூன்று பிரிவுகளாலான நூல் | ||||
17 | ஒன்றே முக்காலடி ஈரடி நூல் |
ஒன்றே முக்காலடியில் அமைந்த நூல் இரண்டு வரிகளில் ஆன நூல் |
||||
18 | வள்ளுவம் | வள்ளுவம் | மொத்தமாக அழைக்கப்படும் பெயர் | |||
19 | இயற்றமிழ் முதுமொழி | |||||
20 | உள்ளிருள் நீக்கும் ஒளி உள்ளிருள் நீக்கும் விளக்கு |
அகவிருளை அகற்றும் உள்ளொளி | நப்பாலத்தனார் | திருவள்ளுவ மாலை, வசனம்-47 | ||
21 | மெய்ஞ்ஞான முப்பால் | தெய்வீக ஞானமளிக்கும்உணவு | ||||
22 | இருவினைக்கு மாமருந்து | கர்மவினைகளைத் தீர்க்கும் மாமருந்து | ||||
23 | வள்ளுவர் வாய்மொழி வள்ளுவன் வாய்ச்சொல் |
வள்ளுவரின் வாயால் உரைக்கப்பட்ட நூல் | மாங்குடி மருதனார் மற்றும் செயலூர் கெடும் செங்கண்ணனார் (வள்ளுவர் வாய்மொழி); இறையனார் (வள்ளுவன் வாய்ச்சொல்) | திருவள்ளுவ மாலை, வசனம் 24 மற்றும் 42 (வள்ளுவர் வாய்மொழி ); வசனம் 3 (வள்ளுவன் வாய்ச்சொல்)[13] | ||
24 | மெய்வைத்த வேதவிளக்கு | உண்மையை உரைக்கும் விளக்கு | ||||
25 | தகவினார் உரை | |||||
26 | பால்முறை | தெய்வ நூல் | கோவூர்கிழார் | திருவள்ளுவ மாலை, வசனம் :38[12] | ||
27 | வள்ளுவமாலை | வள்ளுவரின் மொழி மாலை | 12 பழமையான பெயர்களில் ஒன்று[6] "பிரபந்த தேசிகை" நூலில் வெங்கட சுப்ப பாரதியார் பயன்படுத்தியுள்ளார்.[16] | |||
28 | வள்ளுவதேவன் வசனம் | மாமனிதர் வள்ளுவரின் எழுத்துகள் | பெருந்தொகை, வசனம் : 2001[12] | |||
29 | உலகு உவக்கும் நன்னூல் | |||||
30 | வள்ளுவனார் வைப்பு | வள்ளுவர் அருளிய செல்வங்கள் | பெருந்தொகை, வசனம் : 1999[13] | |||
31 | திருவாரம் | |||||
32 | மெய்வைத்த சொல் | சத்தியம் உரைக்கும் நூல் | ||||
33 | வான்மறை | பிரபஞ்ச நூல். | ||||
34 | பிணக்கிலா வாய்மொழி | |||||
35 | வித்தக நூல் | வாழ்வியல் வித்தைகளைக் கூறும் நூல் | ||||
36 | ஓத்து | |||||
37 | புகழ்ச்சி நூல் | புகழ்பெற்ற நூல் | ||||
38 | குறளமுது | அமிர்தம் போலச் சுவையுடைய குறள்களால் ஆன நூல் | ||||
39 | உத்தரவேதம் | இறுதியான வேதநூல் | 12 பழமையான பெயர்களில் ஒன்று[6] | |||
40 | வள்ளுவதேவர் வாய்மை | வள்ளுவரின் வாக்கு | ||||
41 | கட்டுரை | |||||
42 | திருமுறை | சத்திய வழி | ||||
43 | வள்ளுவர் வாக்கு திருவள்ளுவன் வாக்கு |
வள்ளுவர் உரைத்த வாக்கு | ||||
44 | எழுதுண்ட மறை | எழுத்தாக்கப்பட்ட வேதம் | கம்பர்[15] | கம்பராமாயணம் |
இவற்றையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Velusamy and Faraday, 2017, ப. 54–55.
- ↑ 2.0 2.1 Vedhanayagam, 2017, ப. 136.
- ↑ 3.0 3.1 Lal, 1992, ப. 4333.
- ↑ Kowmareeshwari, 2012, ப. iv–vi.
- ↑ Zvelebil, 1975, ப. 124.
- ↑ 6.00 6.01 6.02 6.03 6.04 6.05 6.06 6.07 6.08 6.09 6.10 6.11 6.12 Zvelebil, 1973, ப. 155–156.
- ↑ Panneerselvam, 2016, ப. 21–22.
- ↑ Pillai, 1972, ப. 3.
- ↑ Pillai, 1972, ப. 3, 9.
- ↑ 10.0 10.1 10.2 10.3 Jagannathan, 2014, ப. 19.
- ↑ Jagannathan, 2014, ப. 19,21.
- ↑ 12.0 12.1 12.2 12.3 12.4 12.5 12.6 Jagannathan, 2014, ப. 20.
- ↑ 13.0 13.1 13.2 Jagannathan, 2014, ப. 21.
- ↑ Jagannathan, 2014, ப. 18–19.
- ↑ 15.0 15.1 Jagannathan, 2014, ப. 18.
- ↑ Jagannathan, 2014, ப. 20–21.
நூற்பட்டியல்
[தொகு]- Kamil Zvelebil (1973). The Smile of Murugan: On Tamil Literature of South India. BRILL. p. 155. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-03591-5.
- Kamil Zvelebil (1975). Tamil Literature. Handbook of Oriental Studies. BRILL. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-04190-7.
- Kamil Zvelebil (1991). Tamil Traditions on Subrahmaṇya-Murugan. Institute of Asian Studies.
- Mohan Lal (1992). Encyclopaedia of Indian Literature: Sasay to Zorgot. Sahitya Akademi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-1221-3.
- K. Panneerselvam (2016). Tirukkural Amaippu திருக்குறள் அமைப்பு. Manivasagar Padhippagam. p. 224.
- Ki. Vaa. Jagannathan (2014). Tirukkural, Aaraicchi Pathippu திருக்குறள், ஆராய்ச்சிப் பதிப்பு (3rd ed.). Coimbatore: Ramakrishna Mission Vidhyalayam.
- M. Shanmukham Pillai (1972). taதிருக்குறள் அமைப்பும் முறையும் [The structure and method of Tirukkural] (1 ed.). Chennai: University of Madras.
{{cite book}}
: Invalid|script-title=
: missing prefix (help) - N. Velusamy; Moses Michael Faraday, eds. (2017). Why Should Thirukkural Be Declared the National Book of India? (in தமிழ் and ஆங்கிலம்) (1 ed.). Chennai: Unique Media Integrators. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-85471-70-4.
- G. U. Pope (1886). The Sacred Kurral of Tiruvalluva Nayanar (1 ed.). New Delhi: Asian Educational Services. p. i (Introduction).
- S. Kowmareeshwari, ed. (August 2012). Pathinen Keezhkanakku Noolgal. Vol. 5 (1 ed.). Chennai: Saradha Pathippagam. pp. iv–vi.
- P. S. Sundaram (1990). Tiruvalluvar Kural (1 ed.). Gurgaon: Penguin Books. pp. 7–16. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-01-44000-09-8.
- Rama Vedhanayagam (2017). Tiruvalluvamaalai: Moolamum Eliya Urai Vilakkamum திருவள்ளுவ மாலை மூலமும் எளிய உரை விளக்கமும் (1 ed.). Chennai: Manimekalai Prasuram. p. 136.