உள்ளடக்கத்துக்குச் செல்

திரிபணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திரிபணி (திரிபு-அணி) தமிழில் போற்றப்பட்ட அணியிலக்கண வகைகளில் ஒன்று. இது சொல்லணி வகை. இது மடக்கணியிலிருந்து சற்றே வேறுபாடு உடையது. மடக்கணியில் ஒரு பாடல் அடியில் உள்ள சில சீர்கள் அடுத்த அடியில் வரும்போது முன்னதன் எதுகையையும் மோனையையும் அப்படியே கொண்டதாக இருக்கும். திரிபணியில் மோனை மாறி வர எதுகை மட்டும் அப்படியே வரும்.

எடுத்துக்காட்டு

கந்தித்தாளை யடுத்தணிசங்கினங் கான்றநித்திலக் கச்சிட்டுக் கைகளால்
பந்தித்தாளை மருட்டு முலைச்சியைப் பாரையா வுன்றன் பாதத்திலே வந்து
வந்தித்தாளை யினிக்கை விடாமலே மஞ்சமீதில் இருத்தி மகிழ்ச்சியாய்ச்
சந்தித்தாளைய மேனினஞ் சித்திர சத்ரமேவும் விநாயக தூதனே, [1]

அடிக்குறிப்பு

[தொகு]
  1. கச்சபால ஐயர் தனிப்பாடல்கள், பாடல் எண் 87
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிபணி&oldid=1886923" இலிருந்து மீள்விக்கப்பட்டது