உள்ளடக்கத்துக்குச் செல்

திராவிசு கெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திராவிசு கெட்
Travis Head
2022 இல் திராவிசு
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்திராவிசு மைக்கேல் ஹெட்
பிறப்பு29 திசம்பர் 1993 (1993-12-29) (அகவை 30)
அடிலெயிட், தெற்கு ஆஸ்திரேலியா
உயரம்179 செமீ[1]
மட்டையாட்ட நடைஇடக்கை
பந்துவீச்சு நடைவலக்கை எதிர்ச்சுழல்
பங்குநடு-வரிசை மட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 454)7 அக்டோபர் 2018 எ. பாக்கித்தான்
கடைசித் தேர்வு27 சூலை 2023 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 213)13 சூன் 2016 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாப4 நவம்பர் 2023 எ. இங்கிலாந்து
ஒநாப சட்டை எண்62
இ20ப அறிமுகம் (தொப்பி 82)26 சனவரி 2016 எ. இந்தியா
கடைசி இ20ப3 செப்டம்பர் 2023 எ. தென்னாப்பிரிக்கா
இ20ப சட்டை எண்62
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2011/12–இன்றுதெற்கு ஆத்திரேலியா
2012/13–இன்றுஅடிலெயிட் ஸ்ரைக்கர்ஸ்
2016–2017ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
2016யோர்க்சயர்
2018உவூசுட்டர்சயர்
2021சசெக்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ப.ஒ.நா மு.த ப.அ
ஆட்டங்கள் 42 64 154 127
ஓட்டங்கள் 2,904 2,393 10,520 4,960
மட்டையாட்ட சராசரி 45.37 42.73 40.93 43.13
100கள்/50கள் 6/16 5/16 21/60 12/26
அதியுயர் ஓட்டம் 175 152 223 230
வீசிய பந்துகள் 545 1053 6,121 1,608
வீழ்த்தல்கள் 9 18 63 26
பந்துவீச்சு சராசரி 37.11 55.50 61.85 62.34
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 4/10 2/21 4/10 2/9
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
18/– 17/– 69/– 39/–
பதக்கத் தகவல்கள்
மூலம்: கிரிக்கின்ஃபோ, 19 நவம்பர் 2023

திராவிசு கெட் (Travis Head, பிறப்பு: 29 திசம்பர் 1993) ஆத்திரேலியப் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர்.[2] இவர் உள்ளூர் போட்டிகளில் தெற்கு ஆத்திரேலியா, அடிலெயிட் ஸ்ரைக்கர்ஸ் ஆகிய அணிகளில் விளையாடி வருகிறார். இவர் இடக்கை மட்டையாளர் ஆவார், வரையிட்ட நிறைவுகள் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராகவும், தேர்வுப் போட்டிகளில் நடு-வரிசை ஆட்டக்காரராகவும் களம் இறங்குகிறார். அத்துடன், இவர் வலக்கை எதிர்ச்சுழல் பந்து வீச்சாளரும் ஆவார். இவர் 2019 சனவரி முதல் 2020 நவம்பர் வரை ஆத்திரேலியத் தேசிய அணியின் இணைத் தலைவராக தேர்வுப் போட்டிகளில் பங்கேற்றார்.[3][4] இவர் 2023 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை இறுதிப்போட்டியில் ஆத்திரேலிய அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்தார், இவர் 163 ஓட்டங்களுடன் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பன்னாட்டு சதங்கள்

[தொகு]

2023 அக்டோபர் வரை, திராவிசு கெட் தேர்வுப் போட்டிகளில் ஆறு சதங்களையும், பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் ஐந்து சதங்களையும் எடுத்துள்ளார்.[5][6]

திராவிசு கெட் எடுத்த தேர்வு சதங்கள்
இல. ஓட்டங்கள் எதிர் அரங்கு நாள் முடிவு
1 161  இலங்கை ஆத்திரேலியா மனுக்கா நீள்வட்ட அரங்கம், கான்பரா 1 பெப்ரவரி 2019 வெற்றி
2 114  நியூசிலாந்து ஆத்திரேலியா மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம், மெல்பேர்ண் 26 திசம்பர் 2019 வெற்றி
3 152  இங்கிலாந்து ஆத்திரேலியா பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம், பிரிஸ்பேன் 8 திசம்பர் 2021 வெற்றி
4 101  இங்கிலாந்து ஆத்திரேலியா பெல்லரைவ் ஓவல் அரங்கம், ஹோபார்ட் 14 சனவரி 2022 வெற்றி
5 175  மேற்கிந்தியத் தீவுகள் ஆத்திரேலியா அடிலெய்டு நீள்வட்ட அரங்கம், அடிலெயிட் 8 திசம்பர் 2022 வெற்றி
6 163  இந்தியா இங்கிலாந்து தி ஓவல், கென்னிங்டன் 7 சூன் 2023 வெற்றி
திராவிசு கெட் எடுத்த பன்னாட்டு ஒருநாள் சதங்கள்
இல. ஓட்டங்கள் எதிர் அரங்கு நாள் முடிவு
1 128  பாக்கித்தான் ஆத்திரேலியா அடிலெய்டு நீள்வட்ட அரங்கம், அடிலெயிட் 26 சனவரி 2017 வெற்றி
2 101  பாக்கித்தான் பாக்கித்தான் கடாபி அரங்கம், லாகூர் 29 மார்ச்சு 2022 வெற்றி
3 152  இங்கிலாந்து ஆத்திரேலியா மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம், மெல்பேர்ண் 22 நவம்பர் 2022 வெற்றி
4 109  நியூசிலாந்து இந்தியா இமாச்சலப் பிரதேச அரங்கு, தரம்சாலா 28 அக்டோபர் 2023 வெற்றி
5 137  இந்தியா நரேந்திர மோடி விளையாட்டரங்கம், அகமதாபாது 19 நவம்பர் 2023 வெற்றி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Travis Head". cricket.com.au. Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 31 December 2022.
  2. "Travis Head". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. ESPN Inc. பார்க்கப்பட்ட நாள் 24 November 2017.
  3. "Bancroft, Burns named in Australia Test squad". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 14 November 2019.
  4. "Pucovski, Green headline Test and Australia A squads". cricket.com.au (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-12.
  5. "Highest Test scores - Travis Head". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 November 2022.
  6. "Highest ODI scores - Travis Head". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 November 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திராவிசு_கெட்&oldid=3986738" இலிருந்து மீள்விக்கப்பட்டது