திரவ நைட்ரஜன்
திரவ நைதரசன் (liquid nitrogen, LN2) என்பது மிகவும் குறைந்த வெப்பநிலையில் திரவ நிலையில் இருக்கும் நைதரசன் ஆகும். இது ஒரு நிறமற்ற தெளிவான திரவம் ஆகும். இதன் கொதிநிலையில் (−196 °C (−321 °F; 77 K)) அடர்த்தி 0.807 கி/மிலி ஆகும். இதன் மின்கோடுபுவூடக மாறிலி 1.43.[1] நைதரசன் முதன் முதலில் 1883 ஏப்ரல் 15 இல் சகில்லோனியன் பல்கலைக்கழகத்தில் போலந்து இயற்பியலாளர்களான சிக்முந்த் வுரூபிளேவ்ஸ்கி, கரோல் ஓல்செவ்சுக்கி ஆகியோரால் திரவமாக்கப்பட்டது.[2] தொழில்முறையில் இது திரவக் காற்றை பகுதிபடக் காய்ச்சி வடித்தலின் மூலம் உருவாக்கப்படுகிறது. இதன் பிசுக்குமை அசிட்டோனதை விட பத்து மடங்கு குறைவானதாகும். திரவ நைதரசன் குளிரூட்டியாகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. திரவ நைதரசன் ஒரு ஈரணுத் திரவம் ஆகும். அதாவது திரவமாக்கலின் போது N2 வளிமத்தின் N சகப் பிணைப்பின் ஈரணு இயல்பு மாற்றமடையாமல் இருக்கும்.[3]
இயல்புகள்
[தொகு]N2 மூலக்கூறின் ஈரணுத் தன்மை திரவமாக்கலுக்குப் பிறகு தக்கவைக்கப்படுகிறது. N2 மூலக்கூறுகளுக்கு இடையிலான பலவீனமான வான் டெர் வால்சு தொடர்பு சிறிய அணுக்கரு ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. இதுவே நைதரசனின் கொதிநிலை வழக்கத்திற்கு மாறாகக் குறைவாக இருப்பதற்கான காரணமாகும்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Murphy, E. J.; Morgan, S. O. "The Dielectric Properties of Insulating Materials" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2-10-2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Tilden, William Augustus (2009). A Short History of the Progress of Scientific Chemistry in Our Own Times. BiblioBazaar, LLC. p. 249. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-103-35842-1.
- ↑ Henshaw, D. G.; Hurst, D. G.; Pope, N. K. (1953). "Structure of Liquid Nitrogen, Oxygen, and Argon by Neutron Diffraction". Physical Review 92: 1229. doi:10.1103/PhysRev.92.1229.
- ↑ Henshaw, D. G.; Hurst, D. G.; Pope, N. K. (1953). "Structure of Liquid Nitrogen, Oxygen, and Argon by Neutron Diffraction". Physical Review 92 (5): 1229–1234. doi:10.1103/PhysRev.92.1229. Bibcode: 1953PhRv...92.1229H.