உள்ளடக்கத்துக்குச் செல்

தியோலோ மலை

ஆள்கூறுகள்: 27°05′20″N 88°30′09″E / 27.0888°N 88.5026°E / 27.0888; 88.5026
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தியோலோ குன்றின் மேல் உள்ள தியோலோ விருந்தினர் மாளிகை.
துர்பின் மலைக்கு எதிரே உள்ள தியோலோ மலை மற்றும் காளிம்பொங்கின் காட்சி

தியோலோ மலை (Deolo Hill) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் காளிம்பொங் நகரில் உள்ள மலைகளில் ஒன்றாகும். காளிம்பொங் டர்பின் மற்றும் தியோலோ ஆகிய இரு மலைகளை இணைக்கும் முகட்டில் இது அமைந்துள்ளது. இந்த மலை கடல்மட்டத்திலிருந்து 1,704 மீட்டர் (5,590 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இது காளிம்பொங் நகரத்தின் மிக உயரமான இடமாகும். இதுநகரின் வடகிழக்கில் அமைந்துள்ளது. நகரின் முதன்மையான குடிநீர் ஆதாரமாக விளங்கும் மூன்று நீர்த் தேக்கங்கள், இந்த மலையின் மேல் உள்ளன. காளிம்பொங் நகரம், ரெல்லி ஆற்றுப் பள்ளத்தாக்கில் உள்ள கிராமங்கள், டீஸ்டா ஆறு மற்றும் டீஸ்டா ஆற்றுப் பள்ளத்தாக்குகள் அனைத்தையும் இந்த இடத்திலிருந்து பார்க்கலாம்.[1]

மேகமூட்டம் இல்லாமல் வானம் தெளிவாக இருக்கும்போது, மேற்கு சிக்கிமின் பனி படர்ந்த மலைகளையும் இங்கிருந்து காணலாம். இந்த மலையின் உச்சியில், பொழுதுபோக்கு நோக்கங்களுக்காகக் கட்டப்பட்ட பூங்கா ஒன்று உள்ளது. இதில் கவர்ச்சியான மலர்ச்செடிகள் பல உள்ளன. இந்த பூங்கா சுற்றுலாப் பயணிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் ஓர் பிரபலமான சுற்றுலாத் தலமாகும். பூங்காவிற்கு அருகில் இந்து கோயிலும் உள்ளது. மொத்தத்தில் தியோலோ காளிம்பொங் நகரம் மற்றும் இதன் அண்டை மலைகளின் பரந்த 360 பாகைக் காட்சியை வழங்குகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. India Handbook. Footprint handbooks. Trade & Travel Publications. 2000. p. 618. பார்க்கப்பட்ட நாள் 2012-10-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியோலோ_மலை&oldid=3390691" இலிருந்து மீள்விக்கப்பட்டது