திபு கணவாய்
திபு கணவாய் | |
---|---|
ஏற்றம் | 4,587 மீ (15,049 அடி) |
அமைவிடம் | சீனா–இந்தியா–பர்மா மும்முனை |
மலைத் தொடர் | இமயமலை |
ஆள்கூறுகள் | 28°9′0″N 97°20′0″E / 28.15000°N 97.33333°E |
திபு கணவாய் (Diphu Pass) என்பது இந்தியா, சீனா மற்றும் மியன்மார் நாடுகளுக்கிடையில் மூன்று நாடுகளின் எல்லைகளும் சங்கமிக்கும் பிரச்சினைக்கு உட்பட்ட புள்ளியில் அமைந்துள்ள ஒரு கணவாய் ஆகும். திபு கணவாய் கிழக்கு அருணாசலப் பிரதேசத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. [1]. இக்கணவாய் மெக்மோகன் எல்லைக் கோட்டில் அமைந்துள்ளது[2].
அக்டோபர் 1960 ஆம் ஆண்டு அக்டோபர் மாத்த்தில் சீனா மற்றும் பர்மா நாட்டினர் திபு கணவாய்க்கான அவர்களின் எல்லையை வரையறுத்துக் கொண்டனர். இந்த எல்லை மலைத்தொடரின் நீர்பிடிப்பு பகுதிக்கு தெற்கே 5 மைல்கள் தள்ளி உள்ளது. இது இந்தியாவின் தூதரகம் சார்ந்த பிரச்சனையாக அமைந்தது, ஏனென்றால் இந்தியா, மும்முனை எல்லை நிர்பிடிப்பு பகுதியில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தது[3]. இப்பிரச்சனை, அருணாசலப் பிரதேசம் சார்ந்த இந்தியா மற்றும் சீனா எல்லை கருத்துவேறுபாட்டில் ஓர் அங்கமாக இருக்கின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Calvin, James Barnard (1984-04-02). "The China-India Border War (1962)". globalsecurity.org. Marine Corps Command and Staff College. பார்க்கப்பட்ட நாள் 2017-02-02.
this placed Diphu Pass--a strategic approach to eastern Assam--in Chinese territory.
- ↑ Tzou, Byron N (1990). China and International Law: The Boundary Disputes. Greenwood Publishing Group. p. 128. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780275934620.
the so-called McMahon Line (that is, from Diphu Pass to Izrazi Pass)
- ↑ Eekelen, Willem van (2015-11-06). Indian Foreign Policy and the Border Dispute with China: A New Look at Asian Relationships. BRILL. p. 121. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789004304314.