உள்ளடக்கத்துக்குச் செல்

தினம் ஒரு ஆப்பிள் உண்டால் மருத்துவரிடம் செல்லவேண்டாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆப்பிள் உண்பதில் சுகாதார நலன்கள் உண்டு என்று பொதுவாக நம்பப்படுகிறது.

தினம் ஒரு ஆப்பிள் உண்டால் மருத்துவரிடம் செல்லவேண்டாம் (An apple a day keeps the doctor away) என்பது ஆப்பிள் உண்பது அல்லது பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஆகியவற்றில் ஆரோக்கியம், நன்மைகள் போன்றவை இருப்பதாகக் கூறும் ஒரு பொதுவான ஆங்கில பழமொழி ஆகும்.

தோற்றம்

[தொகு]

1860 இல் இங்கிலாந்து நாட்டில் (வேல்ஸில்) பழமொழியின் முதல் பதிவு பயன்படுத்தப்பட்டது. அந்த வார்த்தைகளின் அசல் வார்த்தை "படுக்கைக்குச் செல்லும் முன் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், நீங்கள் தன்னுடைய ரொட்டிக்குச் சம்பாதித்து வைப்பீர்கள்" என்பதாகும். தற்போதைய வடிவில் ("நாள் ஒன்றுக்கு ஒரு ஆப்பிள் உண்டால் மருத்துவரை தவிர்க்கலாம்") முதன்முதலில் 1992 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டது2.[1]

அறிவியல் மதிப்பீடு

[தொகு]

ஆப்பிள் மற்றும் பேரி ஆகியவற்றை உண்பது பக்கவாதத்தைதை தடுக்கும், என்பதை 2011 ஆம் ஆண்டில் ஒரு ஆய்வு கண்டறிந்தது.[1] ஆப்பிளை உண்பதால் நடுத்தர வயதான பெரியவர்களின் கணிசமாக கெட்ட கொழுப்பின்  அளவு குறைக்கப்படும் என்று 2012 ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.[1]

2015 ஆண்டில் செய்யப்பட்ட ஆய்வின்படி ஆப்பிள் உண்பது குறித்த இந்த பழமொழியில் உள்ள உண்மை தன்மைக்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆயினும், ஆய்வில் ஒரு நாளுக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டுள்ளவர்கள் குறைவான மருந்து மாத்திரைகளை உபயோகித்தனர் என்று கண்டுபிடித்தார்கள்.[2]

எனினும், ஒரு 2011 ஒரு ஆய்வில் அதிக எடை கொண்ட ஒரு சிறிய ஆண்கள் குழுவுக்கு தினசரி உணவில் 'கோல்டன் ஆப்பிள் உண்ணச் செய்ததில் அதிக அளவு எல்டிஎல் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளுக்கு வழிவகுத்தது என்று கண்டறியப்பட்டது. கோல்டன் ஆப்பிள்களானது உயர் சர்க்கரை மற்றும் குறைந்த பினோலி உள்ளடக்க முடிவுக்கு காரணம் என குறைகூறப்பட்டது.[3]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Ely, Margaret (24 September 2013). "History behind 'An apple a day'". Washington Post. பார்க்கப்பட்ட நாள் 5 December 2015.
  2. Davis, Matthew A.; Bynum, Julie P. W.; Sirovich, Brenda E. (1 May 2015). "Association Between Apple Consumption and Physician Visits". JAMA Internal Medicine 175 (5): 777. doi:10.1001/jamainternmed.2014.5466. 
  3. James, Wong (4 October 2015). "Gardens: the truth about apples". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 16 April 2016.