தினமலர் வாரமலர்
Appearance
தினமலர் வாரமலர் | |
முக்கிய எழுத்தாளர்கள் | அந்துமணி, எலிசா, சின்ன பொண்ணு, சினிமா பொன்னையா, சகுந்தலா கோபிநாத், நடுத்தெரு நாராயணன் |
---|---|
வகை | வார இதழ் பல்சுவை |
வெளியீட்டாளர் | தினமலர் |
நிறுவனம் | தினமலர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வலைத்தளம் | http://www.dinamalar.com/ |
தினமலர் வாரமலர் இதழ் தினமலர் நாளிதழின் ஞாயிற்றுக் கிழமையில் இலவச இணைப்பாக வழங்கப்படும் ஒரு இதழாகும்.
வாரமலர் பகுதிகள்
[தொகு]- பக்தி கட்டுரை - ஆன்மீக சம்மந்தமான கட்டுரைகள் இடம்பெறுகின்றன.
- தமாசு - வாசகர்களின் நகைச்சுவை துணுக்குகள் பிரசுரமாகும் பகுதி.
- இது உங்கள் இடம் - வாசகர்களின் அனுபவங்களும், அறிவுரைகளும் பிரசுரமாகும் பகுதி.
- அர்ச்சனை - வாசகர்கள் எழுதிய கடிதங்கள்
- பா.கே.ப - அந்துமணி பார்த்தது, கேட்டது, படித்தது என்ற பகுதியில் அந்துமணி பார்த்த, படித்த, கேட்ட தகவல்கள்
- அந்துமணி பதில்கள் - வாசகர்களின் கேள்விகளுக்கு அந்துமணி என்ற புனைப்பெயரில் பதில்கள் அளிக்கப்படுகின்றன.
- சினிமா செய்திகள் - துணுக்கு மூட்டை, இதப்படிங்க முதல்ல, அவ்வளோதான் போன்றவை திரைப்படம் சம்மந்தப்பட்ட செய்திகளை வெளியிடுகின்ற பகுதியாகும்.
- அன்புடன் அந்தரங்கம் - வாசகர்களின் கடிதங்களுக்கு ஆலோசனை கூறும் பகுதி.
- திண்ணை - பிரபலங்கள், தலைவர்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும், சுவையான குறிப்புகளையும் நூல்களிலிருந்து தேர்ந்தெடுத்து தருகின்ற பகுதி. நடுத்தெரு நாராயணன் என்ற புனைப்பெயரில் இந்த பக்கம் தொகுக்கப்படுகிறது.
- பிற பகுதிகள் - குறுக்கெழுத்துப் போட்டி, கவிதை சோலை, சிறுகதை, ஓரெழுத்தில் ஒளிந்திருப்பது என்ன, பரிசு கதை
டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி
[தொகு]தினமலர் நிறுவுனர் டி.வி.ராமசுப்பையர் நினைவாக தினமலர் வாரமலர் வார இதழில் வருடம் தோறும் நடத்தப்படும் சிறுகதை போட்டியாகும். இந்தப் போட்டியில் வாசகர்களின் சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் அளிக்கப்படுகின்றன.