திசைத் திசையன்
கணிதத்தில் திசைத் திசையன் (direction vector) என்பது ஒரு கோட்டுத்துண்டைக் குறிக்கும் ஒரு திசையன். இது ஒரு கோட்டின் திசையைத் தருகிறது.
D -ன் கோடுகோட்டின் மீது அமையும் இரு வெவ்வேறான புள்ளிகள் , எனில் கீழ்க்காணும் திசையன், D -ன் திசைத் திசையன் ஆகும்:
v என்பது கோட்டுத்துண்டு D -ன் திசைத் திசையனாக இருந்தால், kv -ம் அதன் திசைத் திசையனாக இருக்கும். (k ஒரு பூச்சியமற்ற திசையிலி) k -ன் வெவ்வேறு மதிப்புகளுக்குக் கிடைக்கும் kv -க்கள் எல்லாம் D -ன் திசைத் திசையன்களாக அமையும். சில சமயங்களில் திசைத் திசையன்கள் அலகு திசையன்களாக வரையறுக்கப்படுகின்றன. அப்பொழுது ஒரு கோட்டிற்கு ஒன்றுக்கொன்று எதிர்க் குறி கொண்ட இரண்டே இரண்டு திசைத் திசையன்கள் (அளவில் சமமானவை, திசையில் எதிரானவை) மட்டும் இருக்கும்.
R2 -ல் அமைந்த ஒரு கோட்டின் திசைத் திசையன்
[தொகு]இரு பரிமாண யூக்ளிடின் வெளியில் ஒரு கோடானது பின்வரும் சமன்பாட்டின் தீர்வுகளால் ஆனதாகும்:
இங்கு a, b, c மெய்யெண்கள். -ன் ஒரு திசைத் திசையன் . -னின் மடங்குகளும் -ன் திசைத் திசையன்களே.
எடுத்துக்காட்டு:
- என்ற சமன்பாடு குறிக்கும் கோட்டின் திசைத் திசையன்கள்:
- , , மற்றும் ....
ஒரு கோட்டின் துணையலகுச் சமன்பாடு
[தொகு]யூக்ளிடின் வெளியில் (எப்பரிமாணமாக இருந்தாலும்) தரப்பட்ட புள்ளி a வழிச் செல்வதும் திசைத் திசையன் v (பூச்சியமற்ற திசையன்) கொண்டதுமான ஒரு கோட்டின் துணையலகுச் சமன்பாடு:
- r = a + tv
இதிலுள்ள துணையலகு t -ன் மதிப்பு -∞ லிருந்து +∞ வரை அமையும்.
வெளி இணைப்புகள்
[தொகு]- Weisstein, Eric W. "Direction." From MathWorld—A Wolfram Web Resource. [1]
- Glossary பரணிடப்பட்டது 2011-10-15 at the வந்தவழி இயந்திரம், Nipissing University
- Finding the vector equation of a line
- Lines in a plane - Orthogonality, Distances பரணிடப்பட்டது 2007-07-01 at the வந்தவழி இயந்திரம், MATH-tutorial
- Coordinate Systems, Points, Lines and Planes