தாவி ஆறு
தாவி ஆறு (तावी नदी) | |
River | |
தாவி ஆறு, ஜம்மு
| |
நாடு | இந்தியா (100%) |
---|---|
மாநிலம் | சம்மு காசுமீர் |
தாவி ஆறு, இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தின் ஜம்மு நகரின் குறுக்கே பாய்ந்து செல்கிறது. தாவி ஆறு ஜம்மு நகரின் ஊடாகப் பாய்ந்து ஜம்மு நகரை இரண்டாக பிரிக்கிறது. பழைய ஜம்மு நகருக்கு முழுமையான குடிநீர் தேவையை தாவி ஆறு வழங்குகிறது.
தாவி ஆற்றின் பிறப்பிடம்
[தொகு]ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள தோடா மாவட்டத்தின் தென்மேற்கே அமைந்த பாதர்வா எனுமிடத்தில் உள்ள காளி குந்தி பனியாற்றிலிருந்து, தாவி ஆறு உருவாகி தோடா மாவட்டம், உதம்பூர் மாவட்டம் மற்றும் ஜம்மு மாவட்டம் வழியாக பாய்ந்து செல்கிறது.
செயற்கை ஏரி
[தொகு]சம்மு காஷ்மீர் மாநிலத்தின் கோடைகாலத் தலைநகரான ஜம்மு நகரத்தின் குடிநீர் ஆதாரத்தைப் பெருக்க, சம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதன்முறையாக தாவி ஆற்றை ஒட்டி முப்பது கோடி ரூபாய் செலவில் பெரிய செயற்கை ஏரி ஒன்று 2012ஆம் ஆண்டிலிருந்து அமைக்கப்பட்டு வருகிறது.[1]
புராணகால நம்பிக்கைகள்
[தொகு]இராஜ பேகர் தேவதா என்பவர், ஜம்முவின் பட்டத்தரசரின் நோயை குணமாக்க தாவி ஆற்றை ஜம்மு நகருக்கு கொண்டு வந்ததாகவும், அதனால் மகிழ்ந்த பட்டத்தரசர் தேவதாவை ஜம்முவின் அரியணையில் அமர்த்தினார்.