உள்ளடக்கத்துக்குச் செல்

தாராநல்லூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாரா நல்லூர் (Tharanallur) என்பது தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி மாவட்டதின் தலைநகரான திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் இதயப் பகுதியான காந்தி சந்தை அருகில் அமைந்துள்ள ஒரு மக்கள் குடியிருப்பு பகுதி ஆகும்.[1]

முற்காலத்தில் அதாவது மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் திருச்சி நகரத்தின் கீழ அரண் சாலையின் கிழக்கில் அமைந்த போர் வீரர்களின் குடியிருப்புப் பகுதியாகவும் ஆயுத தளவாட தொழிற்சாலைகளின் பகுதியாகவும் இந்தப்பகுதி விளங்கியது.

மன்னர்கள் காலத்தில் தஞ்சையிலிருந்து திருச்சி வருபவர்களின் நுழைவாயிலாக, கோட்டையின் கொத்தளமாக தாராநல்லூர் விளங்கியதன் அடையாளமாக இன்றும் சிறீ கொத்தளத்து அலங்க முனீசுவரர் ஆலயம் திகழ்கிறது. மேலும் மாகாளியப்பர் கோவில், சுப்புராயர் கோவில் , செல்லாயி அம்மன் கோவில் முதலானவையும் மக்களின் ஆன்மிக முன்னேற்றத்திற்கு உரிய இடங்களாக உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Madonna, Ancy Donal (2024-08-24). "Residents complain of poor quality of drinking water in parts of Tiruchi". The Hindu (in Indian English). Retrieved 2025-01-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாராநல்லூர்&oldid=4197747" இலிருந்து மீள்விக்கப்பட்டது