தாய்லாந்து நேரம்
தாய்லாந்து நேரம் அல்லது தாய்லாந்து சீர் நேரம் (ஆங்கிலம்: Time in Thailand; தாய்: เวลามาตรฐานไทย) என்பது தாய்லாந்து நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படும் ஒரு நேர முறைமையாகும்.
இந்த நேர வலயம், கிரீன்விச் துள்ளிய நேரத்திற்கு (ஆங்கிலம்: Greenwich Mean Time (GMT) UTC+07:00 மணி நேரத்திற்கு முன்னதாக அமைகின்றது.[1]
பாங்காக் நகருக்கு முன்பு உள்நாட்டு நேரமாக UTC+06:42:04 என இருந்தது. 1920-ஆம் ஆண்டு வரை இந்த நேரப் பயன்பாடு அமலில் இருந்து வந்தது. அதன் பின்னர் இந்தோசீனா நேரம் (Indochina Time): எனும் UTC+07:00; ICT; உள்நாட்டு நேரமாகப் பயன்படுத்தப் படுகிறது.
தாய்லாந்து, பகல் சேமிப்பு நேரத்தைக் கடைபிடிப்பது இல்லை. வியட்நாம், கம்போடியா, லாவோஸ், கிறிஸ்துமஸ் தீவு மற்றும் மேற்கு இந்தோனேசியாவுடன் ஒரே நேர மண்டலத்தைப் பகிர்ந்து கொள்கிறது.[2][3]
விளக்கம்
[தொகு]தமிழ்: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் ஆங்கிலம்: Coordinated Universal Time or UTC
ஒருங்கிணைக்கப்பட்ட பன்னாட்டு நேரம் அல்லது ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் (ஒ.ச.நே) என்பது அதிதுல்லிய அணு நேர சீர்தரம் ஆகும். பன்னாட்டு அணு நேரத்தின் மூலம் வரையறுக்கப்பட்டு உள்ளன.
தாய்லாந்து நேரம்
[தொகு]பயன்பாட்டில் உள்ள காலம் | கிரீன்விச் நேரம் ஈடுசெய்யப்பட்டது | நேரத்தின் பெயர் |
---|---|---|
1 ஜனவரி 1880 - 31 மார்ச் 1920 | UTC+06:42:04 | பாங்காக் சராசரி நேரம் |
1 ஏப்ரல் 1920 – தற்போது | UTC+07:00 | இந்தோசீனா நேரம் (ICT) |
மேற்கோள்
[தொகு]- ↑ "Time Zone & Clock Changes in Bangkok, Thailand". www.timeanddate.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-20.
- ↑ Arnold, Wayne (28 July 2001). "Thailand's Leader Wants to Switch Time Zones". New York Times. https://www.nytimes.com/2001/07/28/business/international-business-thailand-s-leader-wants-to-switch-time-zones.html.
- ↑ Mok Ly Yng. "What time is it really?". Mathematics Department, National University of Singapore. பார்க்கப்பட்ட நாள் 2 July 2019.