உள்ளடக்கத்துக்குச் செல்

தாயின் மணிக்கொடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாயின் மணிக்கொடி
இயக்கம்அர்ஜுன்
தயாரிப்புடி. சுந்தர் ராஜு
கதைஅர்ஜுன்
கே. சி. தங்கம்
இசைவித்தியாசாகர்
நடிப்புஅர்ஜுன்
தபூ
நிவேதிதா ஜெயின்
ஒளிப்பதிவுகே. எஸ். செல்வராஜ்
படத்தொகுப்புபி. சாய் சுரேஷ்
கலையகம்சிறீ லட்சுமி தேவி அசோசியேட்ஸ்
வெளியீடுஆகத்து 29, 1998 (1998-08-29)
ஓட்டம்152 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தாயின் மணிக்கொடி (Thaayin Manikodi) என்பது 1998 ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடி நாடகத் திரைப்படமாகும். அர்ஜுன் எழுதி இயக்கிய இப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதில் அவருடன் தபூ, நிவேதிதா ஜெயின் உள்ளிட்டோர் நடித்தனர். இந்த படம் ஒரு பயங்கரவாதியின் திட்டங்களை முறியடிக்கும் ஒரு நேர்மையான காவல் அதிகாரியின் கதையை விவரிக்கிறது. இப்படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்தார். இந்த திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகள் 1997 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கியது. படம் 1998 ஆகத்து 29 இல் வெளியானது.[1][2]

நடிப்பு

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

இந்த படம் முதன்முதலில் 1996 சனவரியில் அறிவிக்கப்பட்டது. இயக்குநரும் முன்னணி நடிகருமான அர்ஜுன் துவக்கத்தில் விஜயசாந்தியை ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கவைக்க எண்ணினார்.[3] இருப்பினும், படத்தின் தயாரிப்பாளர் சுதாகர் ராஜுவுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் விஜயசாந்தி பின்னர் இந்த படத்திலிருந்து விலகினார்.[4] இந்த படத்தின் தயாரிப்புப் பணிகள் 1996 அக்டோபரில் தொடங்கி முடிக்க ஓராண்டு ஆனது. இந்தி நடிகை தபூ மற்றும் வடிவழகி நிவேதிதா ஜெயின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து, அதன்வழியாக தமிழ் படங்களில் அறிமுகமாயினர். அர்ஜுனின் முந்தைய படமான ஜெய் ஹிந்த் (1994) படத்தில் பிரபலமான பாடலின் வரியே இந்தப் படத்திற்கு பெயராக வைக்கப்பட்டது. இதுவும் அதே போன்று தேசபக்தியை கருப்பொருளாகக் கொண்ட படமாகும். 

இப்படமானது ஆங்காங் மற்றும் சுவிட்சர்லாந்தில் படமாக்கபட்டன.[5] மேலும் ஆந்திராவின் மதனப்பள்ளியில் காட்சிகள் படமாக்கப்பட்டன. கலை இயக்குநர் தோட்டா தரணி படத்திற்கான கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளார்.[4] 1997 இல் நடந்த பெப்சி வேலைநிறுத்தத்தின் விளைவாக தயாரிப்புப் பணிகள் தாமதமாயின.[6]

இசை

[தொகு]

இப்படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்த 6 பாடல்கள் இடம்பெற்றன.[7]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "நூறாண்டுக்கு ஒருமுறை பூக்கின்ற"  கோபால் சர்மா, தேவி நீதியார் 05:15
2. "அடி ராணி சுல்தானா"  மனோ, தேவி நீதியார் 04:18
3. "மிஸ்டர் ஹாலிவுட்"  கோபால் சர்மா, சுவர்ணலதா 05:06
4. "சிக்டீன் செவன்டீன்"  கோபால் சர்மா, சுவர்ணலதா 04:38
5. "அங்கிள் அங்கிள்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், பேபி சுருதி உண்ணிகிருஷ்ணன், பேபி தீபிகா 05:06
6. "யஹான் லட்கி ஹை"  வித்தியாசாகர், சுஜாதா மோகன் 04:26

வெளியீடு

[தொகு]

படம் துவக்கத்தில் 1997 நவம்பர் தீபாவளி விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் பின்னர் பல மாதங்கள் தாமதமானது.[4] இந்த படம் பின்னர் ஆகஸ்ட் 1998 இல் வெளியிடப்பட்டது. படத்தின் துவக்கத்தில் படத்தின் முன்னணி நடிகை நிவேதிதா ஜெயினுக்கு அஞ்சலி வாசகங்கள் இடம்பெற்றன. அவர் படம் வெளியாவதற்கு முன்பே இறந்துவிட்டார். இந்த படம் வணிக ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.[8][9]

அசல் படம் வெளியான நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 2002 நவம்பரில் தெலுங்கில் ஜாதிய பட்டாகம் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.[10]

குறிப்புகள்

[தொகு]
  1. "Rediff On The NeT, Movies: Gossip from the southern film industry". Rediff.com. 1998-11-16. Retrieved 2019-11-30.
  2. "Thayin Manikodi (1998) Tamil Movie". Spicyonion.com. Retrieved 2019-11-30.
  3. "Google Groups". Retrieved 2019-11-30.
  4. "Google Groups". Retrieved 2019-11-30.
  5. "Rediff On The NeT: Madras film strike: Producers demand their pound of flesh". Rediff.com. Retrieved 2019-11-30.
  6. "Thayin Manikodi (Original Motion Picture Soundtrack) - EP by Vidyasagar on Apple Music". Music.apple.com. Retrieved 2019-11-30.
  7. "'Irumbuthirai' takes on Aadhaar: How Tamil films are questioning the Centre". The News Minute. 2018-05-18. Retrieved 2019-11-30.
  8. "Kollywood's 'Gentleman' and Action King: Arjun Sarja at his 150th film". The News Minute. 2017-08-23. Retrieved 2019-11-30.
  9. "Telugu Cinema - Review - Jaatiya Pataakam - Arjun, Tabu, Nivedita - Vidya sagar - Bhuvana Chandra". Idlebrain.com. Retrieved 2019-11-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாயின்_மணிக்கொடி&oldid=4180594" இலிருந்து மீள்விக்கப்பட்டது