உள்ளடக்கத்துக்குச் செல்

தாமிர ஆக்சலேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமிர ஆக்சலேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
தாமிரம்(II) ஆக்சலேட்டு, குப்ரிக் ஆக்சலேட்டு, தாமிரம்(2+) ஈத்தேன் டையோயேட்டு
இனங்காட்டிகள்
814-91-5 Y
55671-32-4
ChemSpider 12596
EC number 212-411-4
InChI
  • InChI=1S/C2H2O4.Cu/c3-1(4)2(5)6;/h(H,3,4)(H,5,6);/q;+2
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 54602330
  • C(=O)(C(=O)O)O.[Cu+2]
UNII BN136S94FS N
UN number 3077
பண்புகள்
CuC
2
O
4
வாய்ப்பாட்டு எடை 153.58
தோற்றம் நீல-வெண்மை திண்மம் (ஓர் அரை நீரேற்றாக)
உருகுநிலை 310 °C (590 °F; 583 K)
insoluble
4.43×10−10[1]
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)[2]
GHS signal word எச்சரிக்கை
<abbr class="abbr" title="தீங்கு விளைவிக்கும் அறிக்கைகளில் வழு">H302+312, H302, H312
P264, P270, P280, P301+312, P302+352, P312, P322, P330, P363, P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தாமிர ஆக்சலேட்டு (Copper oxalate) CuC2O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும்.[3] தாமிரமும் ஆக்சாலிக் அமிலமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது. நடைமுறையில் தாமிர ஆக்சலேட்டு நீர், ஆல்ககால், ஈதர் மற்றும் அசிட்டிக் அமிலத்தில் கரையாது. ஆனால் அம்மோனியம் ஐதராக்சைடில் கரையும். தாமிர ஆக்சலேட்டு ஒரு நீரேற்றாக உருவாகிறது. அமில-நீல படிகங்களை இது உருவாக்குகிறது.[4]

தயாரிப்பு

[தொகு]

தாமிரம்(II) உப்புடன் சோடியம் ஆக்சலேட்டு கரைசலை சேர்த்து வீழ்படிவாக்கல் வினை மூலம் தாமிர ஆக்சலேட்டை தயாரிக்கலாம். அல்லது ஆக்சாலிக் அமிலத்துடன் தாமிர சல்பேட்டை சேர்த்து வினைபுரியச் செய்தும் தாமிர ஆக்சலேட்டை உருவாக்கலாம்.[5]

பண்புகள்

[தொகு]

ஓர் அரைநீரேற்றாக தாமிர ஆக்சலேட்டு என்பது ஒரு நீல-வெள்ளை திண்மமாகும். இது நடைமுறையில் தண்ணீரில் கரையாதது. 200 பாகை செல்சியசு வெப்பநிலையில், படிகமயமாக்கல் காரணமாக இது தண்ணீரை இழக்கிறது. தாமிர ஆக்சலேட்டு கார உலோக ஆக்சலேட்டுகள் மற்றும் அம்மோனியம் ஆக்சலேட்டுடன் சேர்ந்து அணைவுச் சேர்மங்களை உருவாக்குகிறது:

பயன்கள்

[தொகு]

தாமிர ஆக்சலேட்டு கரிம வினைகளுக்கு ஒரு வினையூக்கியாகப் பயன்படுகிறது. அசிட்டைலேற்றம் பெற்ற அசிட்டாலை நிலைநிறுத்தவும் இது பயன்படுகிறது.[6]

இதையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. John Rumble (June 18, 2018). CRC Handbook of Chemistry and Physics (in English) (99 ed.). CRC Press. pp. 5–188. ISBN 978-1138561632.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Copper oxalate - Substance Information - ECHA". European Chemical Agency. Retrieved 17 June 2021.
  3. Royappa, A. Timothy; Royappa, Andrew D.; Moral, Raphael F.; Rheingold, Arnold L.; Papoular, Robert J.; Blum, Deke M.; Duong, Tien Q.; Stepherson, Jacob R. et al. (November 2016). "Copper(I) oxalate complexes: Synthesis, structures and surprises". Polyhedron 119: 563–574. doi:10.1016/j.poly.2016.09.043. 
  4. "Hazardous Substances Data Bank (HSDB) : 265" (in ஆங்கிலம்). National Library of Medicine. Retrieved 17 June 2021.
  5. Gooch, Frank Austin (1909). The precipitation of copper oxalate in analysis. p. 448. OCLC 890741677.
  6. Richardson, H. Wayne (1997). Handbook of Copper Compounds and Applications. CRC Press. p. 84. ISBN 978-0-8247-8998-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமிர_ஆக்சலேட்டு&oldid=3849108" இலிருந்து மீள்விக்கப்பட்டது