தானா பவன் சட்டமன்றத் தொகுதி
Appearance
தானா பவன் சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதி. இது கைரானா பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
பகுதிகள்
[தொகு]இந்த தொகுதியில் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.[1]
- ஷாம்லி வட்டத்துக்கு உட்பட்ட தானா பவன் கனுங்கோ வட்டம்
- ஷாம்லி வட்டத்துக்கு உட்பட்ட ஷாம்லி கனுங்கோ வட்டத்தில் உள்ள தப்ரானா, புர்மாஃபீ, நொனாகலி, சிலாவர், கதிபுக்டா, மலாண்டி, தானா, கோஹர்னி, ராஜாடு, பைன்ஸ்வால், சிக்கா, கேடி, பாப்ரி, புத்ரடா, சோண்டா, பந்தீகேடா, கரோடஹத்தி, கசேர்வகாலாம், திதவுலி ஆகிய பத்வார் வட்டங்கள்.
- ஷாம்லி வட்டத்துக்கு உட்பட்ட கடிபுகட்டா நகராட்சி, தானா பவன் நகராட்சி, ஜலாலாபாத் நகராட்சி ஆகியன.
- கைரானா வட்டத்துக்கு உட்பட்ட உன் கனுங்கோ வட்டத்தில் உள்ள பிண்டவுரா ஜஹாங்கீர்பூர், ஹத்சோயா, முந்தேத் ஆகிய பத்வார் வட்டங்கள்
(கனுங்கோ வட்டம் என்பது வட்டத்தின் உட்பிரிவாகும். பத்வார் வட்டம் என்பது கனுங்கோ வட்டத்தின் உட்பிரிவாகும்.)
சட்டமன்ற உறுப்பினர்
[தொகு]இந்த தொகுதியில் இருந்து உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
- உத்தரப் பிரதேசத்தின் பதினாறாவது சட்டமன்றத்தில், இந்த தொகுதியை சுரேஷ் ராணா முன்னிறுத்துகிறார்.[2]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-09-14.
- ↑ "தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இணையதளம்". Archived from the original on 2015-08-13. பார்க்கப்பட்ட நாள் 2015-02-01.