தாத்ரா மற்றும் நகர் அவேலி வனவிலங்கு சரணாலயம்
தாத்ரா மற்றும் நகர் அவேலி வனவிலங்கு சரணாலயம் Dadra and Nagar Haveli Wildlife Sanctuary | |
---|---|
சத்மாலியா மான் பூங்கா வசோனா சிங்கங்கள் காப்பகம் | |
அமைவிடம் | தாத்ரா மற்றும் நகர் அவேலி , தாத்ரா மற்றும் நகர் அவேலி மற்றும் தாமன் மற்றும் தியூ, இந்தியா |
அருகாமை நகரம் | சில்வாசா |
பரப்பளவு | 97 km2 (37 sq mi)[1] |
நிருவாக அமைப்பு | தாத்ரா மற்றும் நகர் அவேலி சுற்றுலாத்துறை |
dnh |
தாத்ரா மற்றும் நகர் அவேலி வனவிலங்கு சரணாலயம் (Dadra and Nagar Haveli Wildlife Sanctuary) இந்திய ஒன்றியப் பிரதேசமான தாத்ரா மற்றும் நகர் அவேலி மற்றும் தாமன் மற்றும் தியூவில் அமைந்துள்ள ஒரு வனவிலங்கு சரணாலயம் ஆகும். சத்மாலியா மான் பூங்கா [2]மற்றும் வசோனா சிங்கங்கள் காப்பகம் ஆகியன்வும் சரணாலயத்தில் இடம்பெற்றுள்ளன.[3][4][5]
சத்மாலியா மான்பூங்கா
[தொகு]மாவட்டத் தலைமையகமான சில்வாசாவிற்கு தெற்கே 12 கிமீ தொலைவில் சில்வாசா-கான்வெல் சாலையில் கான்வெல் கிராமத்திற்கு அருகில் சத்மாலியா மான் பூங்கா அமைந்துள்ளது.
இந்த வனவிலங்கு சரணாலயம் புள்ளிமான், நீலான், கடமான், இந்தியச் சிறுமான் மற்றும் புல்வாய் போன்ற பல விலங்குகளின் இருப்பிடமாக இச்சரணாலயம் உள்ளது. இந்திய மயில், பொன்முதுகு மரங்கொத்தி, அமெரிக்க பாடும் பறவை போன்ற பிற இனங்களையும் இங்கு காணலாம்.[6][7]
வசோனா சிங்கம் காப்பகம்
[தொகு]வசோனா வனவிலங்கு சரணாலயமும் சத்மாலியா மான் பூங்காவிற்கு அருகில் அமைந்துள்ள இந்த சரணாலயத்தின் ஒரு பகுதியாகும். சில்வாசாவிற்கு தெற்கே 10 கிமீ தொலைவில் வசோனா சிங்கம் காப்பகம் உள்ளது. இந்த பூங்கா ஆசிய சிங்கங்களை பாதுகாப்பதற்காக கட்டப்பட்டது. பூங்காவில் மலைப்பாம்பு போன்ற ஊர்வன இனங்களும் உள்ளன.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "DNH Wildlife Sanctuary Area".
- ↑ "SATMALIA DEER SANCTUARY | Dadra & Nagar Haveli District Website | India" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-12-22.
- ↑ "Vasona Lion Safari". Dadra and Nagar Haveli Government. Retrieved 2022-12-22.
- ↑ "Things to Do - Satmaliya Deer Park, Silvassa, Dadra and Nagar Haveli". www.nivalink.com. Retrieved 2022-12-22.
- ↑ Bhatnagar, Gaurav. "Vasona lion safari and Satmalia deer park". Times of India Travel (in ஆங்கிலம்). Retrieved 2022-12-22.
- ↑ "Satmaliya Deer Park Travel and Tourism Guide". India.com (in ஆங்கிலம்). Retrieved 2022-12-22.
- ↑ "Satmalia Deer Park in Silvassa, Wildlife Sanctuaries in Silvassa". www.silvassaonline.in. Retrieved 2022-12-22.
- ↑ "VASONA LION SAFARI | Dadra & Nagar Haveli District Website | India" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-12-22.