கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முக்கோணவியலில்தாஞ்சன்களின் விதி (law of tangents) அல்லது டான்களின் விதி என்பது ஒரு முக்கோணத்தின் மூன்று பக்க நீளங்களுக்கும், அம்முக்கோணத்தின் கோணங்களின் தாஞ்சன்களுக்கும் (tangents) இடையே உள்ள ஓர் உண்மைக்கூற்று.
படம் 1 இல் a, b, c என்பன முக்கோணத்தின் மூன்று பக்க நீளங்கள். α, β, γ என்னும் மூன்றும், அப்பக்கங்களுக்கு நேர் எதிராக, முறையே, உள்ள கோணங்கள். அதாவது a என்னும் பக்கத்துக்கு நேர் எதிரான கோணம் α, அதே போல b, c என்னும் பக்கங்களுக்கு நேர் எதிராக கோணங்கள் β, γ ஆகும்.
முக்கோணவியலில் தாஞ்சன்களின் விதி அல்லது டான்களின் விதி என்ன சொல்கின்றது என்றால்,
மேற்குறிப்பிட்ட தான்களின் விதி, மற்ற சைன்களின் விதி, கோசைன்களின் விதி போல் அவ்வளவாகப் பரவலாக அறியப்படாவிட்டாலும், அவைபோலவே பயனுடைய விதி. ஒரு முக்கோணத்தின் இரண்டு பக்கங்களும் ஒரு கோணமும் அறிந்திருந்தாலோ அல்லது இரு கோணங்களும் ஒரு பக்கமுமோ அறிந்திருந்தாலோ, சில உண்மைகளை நிறுவப் பயனுடையதாக இருக்கும் ஒரு இவ்விதி.