தவிட்டுக் குருவி
Appearance
தவிட்டுக் குருவி | |
---|---|
பன்றிக்குருவி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Passeriformes
|
குடும்பம்: | Timaliidae
|
பேரினம்: | Turdoides
|
இனம்: | T. affinis
|
இருசொற் பெயரீடு | |
Turdoides affinis (தாமசு செருடான், 1845) |
வெண்தலை சிலம்பன், (தென்னிலங்கையில்) குந்துகாலி, தவிட்டுக் குருவி, கரியில்லாக்கிளி (மலையாளத்தில்), புலுணி என்று பலவாறு அழைக்கப்படும் பன்றிக்குருவி தென்னிந்தியா (பெல்காம், ஐதராபாத், தெற்குக் கோதாவரி பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளை வட எல்லையாகக் கொண்டது) , இலங்கைப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் குருவி (இலங்கையில் இதனை புலுனி என்றும் அழைப்பர்) - பெரும்பான்மையான சிலம்பன்களைப் போலவே இக்குருவியும் குடிபெயர்வதில்லை. உருவத்திலும் செயலிலும் கள்ளிக்குருவியை ஒத்து இருப்பதால் இதை எளிதில் தவறாக கள்ளிக்குருவி என்றெண்ணக் கூடும். ஆனால், பன்றிக்குருவியின் தலை வெளிர் நிறங்கொண்டு இருக்கும்; மார்பும் தொண்டையும் சற்று கருந்தோற்றத்துடன் விளங்கும்.[2]