தலையணைப் பூக்கள்
தலையணைப் பூக்கள் | |
---|---|
வகை | |
மூலம் | தலையணைப் பூக்கள் புதினம் |
எழுத்து | |
திரைக்கதை |
|
இயக்கம் |
|
படைப்பு இயக்குனர் |
|
நடிப்பு |
|
நாடு | தமிழ்நாடு |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | 549 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | விமலா ரமணன் |
படப்பிடிப்பு தளங்கள் | சென்னை காஞ்சிபுரம் |
ஒளிப்பதிவு |
|
தொகுப்பு | சஜின்.சி |
படவி அமைப்பு | பல ஒளிப்படக்கருவி |
ஓட்டம் | தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி) |
தயாரிப்பு நிறுவனங்கள் | ஹன்சா விஷன் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஜீ தமிழ் |
ஒளிபரப்பான காலம் | 23 மே 2016 29 சூன் 2018 | –
Chronology | |
முன்னர் | பிரியசகி (21:00) |
பின்னர் | செம்பருத்தி (21:00) |
தலையணைப் பூக்கள் என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 23 மே 2016 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பான குடும்ப கதைக்களத்தை கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இது புதின எழுத்தாளர் பாலகுமாரன் இதே பெயரில் எழுதிய புதினத்தை தழுவி எடுக்கப்பட்ட தொடர் ஆகும்.[2][3][4]
இந்த தொடர் 'ஹன்சா விஷன்' என்ற நிறுவனம் சார்பில் விமலா ரமணன் என்பவர் தயாரிக்க, நிஷா கிருஷ்ணன், ஸ்ரீ குமார் , அஞ்சலி ராவ், சாண்ட்ரா ஆமி, நீலிமா ராணி, டெல்லி குமார், நவின் குமார் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[5] இந்த தொடர் 29 சூன் 2018 ஆம் ஆண்டு அன்று 549 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
நடிகர்கள்
[தொகு]முதன்மை கதாபாத்திரம்
[தொகு]- நிஷா கிருஷ்ணன்[6][7] (1-340) → அஞ்சலி ராவ் (341-549) - வேதவல்லி நாகராஜன்
- ஸ்ரீ குமார் (1-508) → நவின் குமார் (509-549) - நாகராஜன்
- நீலிமா ராணி - மல்லிகா
- சாண்ட்ரா ஆமி - கல்பனா சுந்தரராஜன்
- ஸ்ரீகர் - சுந்தரராஜன்
துணைக் கதாபாத்திரம்
[தொகு]- டெல்லி குமார் - ராமநாதன்
- வனிதா ஹரிஹரன் - மஞ்சு
- ஆனந்தி - நிஷா & அனிதா
- ஸ்ரீதர் - நட்ராஜன் ராமநாதன்
- அழகப்பன் - பஞ்சாயத்து
- சாய்ராம்
- விழுதுகள் சந்தானம்
- பபிதா
- சுதா
ஒளிபரப்பு நேரம் மாற்றம்
[தொகு]இந்த தொடர் ஆரம்பத்தில் 23 மே 2016 முதல் 13 அக்டோபர் 2017 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரபபாகி, 16 அக்டோபர் 2017 முதல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் 23 ஏப்ரல் 2018 முதல் இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாகி நிறைவு பெற்றது.
ஒளிபரப்பு தேதி | நாட்கள் | நேரம் | அத்தியாயங்கள் |
---|---|---|---|
23 மே 2016 - 13 அக்டோபர் 2017 | 21:00 | 1-365 | |
16 அக்டோபர் 2017 - 20 ஏப்ரல் 2018 | 22:00 | 366-499 | |
23 ஏப்ரல் 2018 - 29 ஜூன் 2018 | 22:30 | 500-549 |
சர்வதேச ஒளிபரப்பு
[தொகு]- இந்த தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சி மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
- இந்த தொடரின் பகுதிகள் ஜீ5 என்ற இணைய மூலமாகவும் பார்க்கலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Thalayanai Pookal to be aired from May 23". timesofindia.indiatimes.com.
- ↑ "பாலகுமாரனின் தலையணைப் பூக்கள் கதை... ஜீ தமிழில் சீரியலாகிறது". tamil.filmibeat.com.
- ↑ "Balakumarans Thalayanai Pookal on Zee-Tamil". timesofindia.indiatimes.com.
- ↑ "A serial based on Bala Kumaran's novel". timesofindia.indiatimes.com.
- ↑ "Balakumarans Thalayanai Pookal Novel becomes TV Serial". cinema.dinamalar.com.
- ↑ "Nisha Ganesh to play the lead in Thalayanai Pookal". timesofindia.indiatimes.com.
- ↑ "Nisha Ganesh in Thalayanai Pookal". cinema.dinamalar.comm.
வெளி இணைப்புகள்
[தொகு]ஜீ தமிழ் : திங்கள்-வெள்ளி இரவு 9 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | தலையணைப் பூக்கள் | அடுத்த நிகழ்ச்சி |
பிரியசகி | செம்பருத்தி |
- ஜீ தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்
- தமிழகத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ் குடும்பத் தொலைக்காட்சி தொடர்கள்
- 2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2016 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2018 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்