உள்ளடக்கத்துக்குச் செல்

தரூர் (கிராம ஊராட்சி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தரூர் கிராம ஊராட்சி என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் ஆலத்தூர் வட்டத்தில் ஆலத்தூர் ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு கிராம ஊராட்சி ஆகும். தரூர் ஒன்று மற்றும் தரூர் இரண்டு கிராமங்களில் பரவியுள்ள இந்த பஞ்சாயத்து 34.72 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. தரூர் பஞ்சாயத்து வடக்கில் பெருங்கோடுகுறுச்சி, குத்தனூர், திருவில்வமலை ஊராட்சிகளையும் கிழக்கில், காவசேரி, எரிமாயூர் ஊராட்சிகளையும் மேற்கில் காயத்திரிபுழாவும் எல்லைகளாகக் கொண்டமைந்துள்ளது.[1]

தரூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் இங்குள்ள ஒரு இந்து வழிபாட்டுத் தலமாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Reports of National Panchayat Directory". Ministry of Panchayati Raj. Archived from the original on 1 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 31 December 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தரூர்_(கிராம_ஊராட்சி)&oldid=3930709" இலிருந்து மீள்விக்கப்பட்டது