உள்ளடக்கத்துக்குச் செல்

தயோசிலிக்கேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தயோசிலிக்கேட்டு (Thiosilicate) என்பது வேதியியலிலும் பொருளறிவியலிலும் [SiS2+n]2n− என்ற வாய்பாட்டிலான எதிர்மின் அயனிகளை கொண்ட பொருள்களைக் குறிக்கும். வழிப்பெறுதிகளில் சில சல்பைடுகள் ஆக்சைடுகளால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு உருவாகும் பொருள்களும் தயோசிலிக்கேட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன. ஆக்சோயெக்சாதயோயிருசிலிக்கேட்டிலிருந்து [Si2OS6]6− பெறப்பட்ட பொருட்களை உதாரணமாகக் கூறலாம். சிலிக்கான் அனைத்து தயோசிலிகேட்டுகளிலும் நான்முகியாகவும் கந்தகம் பாலமாக அல்லது விளிம்பு நிலையிலும் இருக்கும். முறைப்படி இத்தகைய பொருட்கள் சிலிக்கான் டை ஆக்சைடு மற்றும் சிலிக்கேட்டுகளுக்கு இடையே உள்ள உறவுக்கு ஒப்பாக சிலிக்கான் டைசல்பைடிலிருந்து பெறப்படுகின்றன. தயோசிலிகேட்டுகள் பொதுவாக நிறமற்ற திடப்பொருளாகக் காணப்படுகின்றன. இவை நீராற்பகுத்தலுக்கு பண்புரீதியாக உணர்திறன் கொண்டவை. சால்கோசெனிடோடெட்ரிலேட்டுகள் என்ற வகுப்பைச் சேர்ந்தவையாக வகைப்படுத்தப்படுகின்றன.

Fe2(SiS4 சேர்மத்தின் கட்டமைப்பு. Fe எண்முக ஒருங்கிணைப்பில் உள்ளன. Si நான்முகி வடிவம் கொண்டுள்ளது. சல்பைடு பாலங்களாக உள்ளது. [1] Color code: S = yellow, Fe = blue, Si = orange.

பொருளறிவியல்

[தொகு]

இலிசிகான் எனப்படும் இலித்தியம் சூப்பர் அயனி கடத்திகளில் வேகமான அயனி கடத்திகளான தயோசிலிக்கேட்டுகளும் அடங்கும்.[2] தயோசிலிக்கேட்டுகள் மற்றும் தொடர்புடைய தயோசெருமேனேட்டுகள் அகச்சிவப்பு ஒளியியலுக்கு பொருத்தமானவையாக உள்ளன. ஏனெனில் அவை குறைந்த அதிர்வெண் ஐஆர் முறைகளை மட்டுமே உறிஞ்சுகின்றன.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Vincent, H.; Bertaut, E. F.; Baur, W. H.; Shannon, R. D. (1976). "Polyhedral deformations in olivine-type compounds and the crystal structure of Fe2SiS4 and Fe2GeS4". Acta Crystallographica Section B Structural Crystallography and Crystal Chemistry 32 (6): 1749–1755. doi:10.1107/S056774087600633X. Bibcode: 1976AcCrB..32.1749V. 
  2. Morimoto, Hideyuki; Yamashita, Hideki; Tatsumisago, Masahiro; Minami, Tsutomu (1999). "Mechanochemical synthesis of new amorphous materials of 60Li2S·40SiS2 with high lithium ion conductivity". Journal of the American Ceramic Society 82 (5): 1352–1354. doi:10.1111/j.1151-2916.1999.tb01923.x. 
  3. Yin, Wenlong; Feng, Kai; He, Ran; Mei, Dajiang; Lin, Zheshuai; Yao, Jiyong; Wu, Yicheng (2012). "BaGa2MQ6 (M = Si, Ge; Q = S, Se): A New Series of Promising IR Nonlinear Optical Materials". Dalton Transactions 41 (18): 5653–5661. doi:10.1039/c2dt12493a. பப்மெட்:22434416. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயோசிலிக்கேட்டு&oldid=4092271" இலிருந்து மீள்விக்கப்பட்டது