உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்நாட்டு தொழிற்துறைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொழிலே ஒரு நாட்டின் உயிர்த்துடிப்பு. தொழிலில் சிறந்து விளங்கும் நாடு, பொருளாதாரத்திலும் பண்பாட்டிலும் சிறந்து விளங்கும். தாம் வாழ்ந்த திணைகளுக்கு பொருந்தியது போல் தமிழர்கள் பேண்தகு தொழில் செய்து சிறப்புற்றிருக்கிறார்கள். தற்காலம் உந்திய அறிவியல் தொழில்நுட்ப புரட்சிகர மாற்றங்களுடன் இயைந்து வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பல்வேறு தொழில்கள் தொடர்பான கட்டமைப்புளையும் செயற்பாடுகளையும் தமிழ்நாட்டு தொழிற்துறைகள் என்ற தலைப்பு குறிக்கின்றது. தொழிலாளர்கள், முதலீட்டாளர்கள், வணிக நிறுவனங்கள், அரச அலகுகள், இயற்கை வளங்கள், தொழில்நுட்பம், சட்ட-வணிக சூழல் ஆகியவை தமிழ்நாட்டு தொழிற்துறையின் கூறுகள் ஆகும்.

தமிழ்நாட்டின் பல்வேறு தரவுகள் தொழிற்துறையின் வளர்ச்சியை சுட்டி நிற்கின்றன.

மொத்த தேசிய உற்பத்தி - 64 billion USD - இந்தியாவில் ஐந்தாவது நிலை [1].
தொழில்மயமாக்கம் - இந்தியாவில் இரண்டாவது நிலை .[2]
நகரமயமாதல் - 43.86 % - இந்தியாவில் முதலாவது நிலை .[3]
வெளிநாட்டு முதலீடு - 9.12% - இந்தியாவில் மூன்றாவது நிலை .[4]
தனிநபர் வருமானம் -
இறக்குமதி
ஏற்றுமதி

உற்பத்தி

[தொகு]
ஹுன்டாய் தொழிற்சாலை திருபெரும்புதூர், இந்தியா.

தமிழக அரசின் தொழில் கொள்கை, அதிக வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு, சென்னையின் துறைமுக வசதி ஆகிய காரணங்களுக்காக சென்னையில் அதிக அளவில் வாகண உற்பத்தி தொழில்சாலைகள் உள்ளன. ஹுன்டாய்[கொரிய நிறுவனம்] வருடத்தில் 3,30,000 கார்களை(தானுந்து) சென்னையில் உள்ள தொழில்சாலையில் இருந்து தயாரிக்கிறது. ஹுன்டாய் மார்ச் 2012 வரை, 1.5 மில்லியன் கார்களை சென்னையில் உள்ள தொழில்சாலையில் இருந்து 120 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.[5].

மென்பொருள் அதிக அளவில் எற்றுமதி செய்யும் மாநிலங்களில், தமிழ்நாடும் ஒன்று. 2011-2012 ஆம் ஆண்டு, மென்பொருள் எற்றுமதி $8.5 பில்லியன் என்ற அளவில் இருந்தது. தமிழ்நாட்டில் மென்பொருள் மற்றும் மென்பொருள் சார்ந்த துரைகளில் 3.75 லட்சம் பேர் நேரடியாவும், 7.50 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்[6]. இந்தியாவில் மென்பொருள் எற்றுமதி செய்யும் நகரங்களில், சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளது.மென்பொருள் எற்றுமதி தமிழ்நாட்டில் 2008–09 ஆண்டு 29 விழுக்காடு உயர்ந்து, 280,000 மக்கள் வேலைவாய்ப்பு பெற்று, ரூபாய் 366.80 பில்லியன் என்று இருந்தது[7].

தமிழ்நாடு மின்னணுவியல் தயாரிப்பு துறையில் வளர்ந்து வரும் மாநிலம். சென்னையில் நோக்கியா, மோட்டோரோலா, சோனி-எரிக்சன், சாம்சங், சிஸ்கொ, டெல் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. டெல், வருடத்தில் தொராயமாக 4,00,000 மடிக்கணினி,மேசைத்தள கணினியை சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரில் இருந்து தயாரிக்கிறது.[8][9]. சாம்சங் சென்னையில் 2007ஆம் ஆண்டில் இருந்து தொலைக்காட்சி பெட்டிகளை தயாரிக்கிறது. சாம்சங் சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரில் இருந்து வருடத்தில் தொராயமாக 10,20,000 குளிர்சாதன பெட்டிகளை 2010ஆம் ஆண்டில் இருந்து தயாரிக்கிறது[10]. நோக்கியா வருடத்தில் தொராயமாக 25,00,000 கைபேசிகளை சென்னையில் இருந்து தயாரிக்கிறது.

தமிழ்நாட்டு தொழிற்துறைகள் பட்டியல்

[தொகு]

தொழிற்துறைகளும் பொருளாதாரப் பங்கும்

[தொகு]
தொழிற்துறை பொருளாதாரப் பங்கு
சேவை 45%
உற்பத்தி 34%
வேளாண்மை 21%

தொழிலும் வாழ்வும்

[தொகு]

ஒவ்வொரு தொழிலும் சமம்மென்று கூற முடியாது. வெவ்வேறு காலகட்டங்களில் சூழ்நிலைகளில் வெவ்வேறு தொழில்கள் சிறப்புப்பெற்று இருக்கின்றன. சில தொழில்கள் கூடிய வரவாய் ஈட்டக்கூடியவை. திடைப்பத்துறை போன்ற சில தொழிற்துறைகள் பொருளாதரத்தில் சிறு பங்கே வகித்தாலும், சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடியவை. வேளாண்மை, மீன்பிடித்துறை போன்றவை வாழ்வியலோடு ஒன்றிய மரபுத் தொழிதுறைகள் ஆகும்.

பண்டை சாதிய இந்திய அமைப்பு போன்றல்லாமல், இன்றைய சூழல் தனிமனிதர் தேர்ந்தெடுக்கும் எந்த ஒரு தொழிற்துறையிலும் சிறப்பு பெற கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றது. புதிய தொழிற்துறைகளில் சிறக்க கல்வியும் ஈடுபாடும் ஆதாரமாகின்றன.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

தமிழ்நாட்டுப் பொருளாதாரம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Official site". Government of Tamil nadu. பார்க்கப்பட்ட நாள் 2006-08-16.
  2. "Ranking of states". Archived from the original on 2006-10-28. பார்க்கப்பட்ட நாள் 2008-03-02.
  3. "World Bank Supports India's Urban Development". Archived from the original on 2008-02-20. பார்க்கப்பட்ட நாள் 2008-03-02.
  4. "Tamil Nadu ranks third in FDI, favoured destination". Archived from the original on 2005-04-24. பார்க்கப்பட்ட நாள் 2008-03-02.
  5. hyndai chennai
  6. Tamil Nadu most preferred investment destination in India[தொடர்பிழந்த இணைப்பு]
  7. "The Hindu Chennai". Archived from the original on 2013-03-15. பார்க்கப்பட்ட நாள் 2013-12-25.
  8. "Dell India Details". Archived from the original on 2013-12-04. பார்க்கப்பட்ட நாள் 2013-12-25.
  9. "Dell India Details pcworld article". Archived from the original on 2020-11-30. பார்க்கப்பட்ட நாள் 2013-12-25.
  10. samsang chennai inaguration details

இவற்றையும் பார்க்க

[தொகு]