உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்நாட்டில் நிலச்சீர்திருத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியா சுதந்திரமடைந்த போதும் அதற்கு முன்பும் தமிழ்நாட்டில் அதிகாரம் வர்க்கத்தில் ஒரு பிரிவிரான நிலக்கிழார்களே பெரும்பான்மை நிலத்தை உரிமையாக்கி, தொழிலாளர்களை கொண்டு, சில வேளைகளில் கொத்தடிமைகளாகவும் கொண்டு நிலத்தில் பயிர் செய்து இலாபம் ஈட்டி வந்தனர். நிலத்தில் உழைக்கும் பெரும்பான்மையான விவசாயிகள் நிலம் அற்றே இர்ருந்தனர். தொடக்கத்தில் சுதந்திர இந்தியா இந்த நிலைமையை சீர்செய்ய முயன்றது. சமத்துவமுள்ள உற்பத்தி திறன் பெருகிய சமுதாயத்தை உருவாக்க உழைக்கும் விவசாயிக்கு அவரின் உழைப்பின் பலன் முழுவதும் கிட்ட அவர் பயிர் விதைக்கும் நிலம் அவருக்கு சொந்தமாக இருக்க வேண்டும் என்பது சீர்திருத்தவாதிகளால் நன்கு உணரப்பட்டது.

முதலில் காந்திய முறையில் முயன்ற சிலர் நிலக்கிழார் தாமாக முன்வந்து தரும் நிலத்தை பகிர்ந்தளித்தனர். பின்னர் அரசு நிலங்களை விலைக்கு வாங்கி பகிர்வதை நடைமுறைப்படுத்த முயன்றது. இரண்டும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட வெற்றியை மட்டுமே ஈட்டின. கிழக்கு வங்காளம், கேரளா போன்ற மாநிலங்களில் இது ஓரளவு வெற்றியை ஈட்டினாலும், மற்றய மாநிலங்களில் இது பெரிதும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்தக் குறை தமிழ்நாட்டுக்கும் உண்டு. குறிப்பாக ஏழை மக்களின் ஏழ்மையை போக்குவோம் என்று கோசமிட்டு அதிகாரத்துக்கு வந்த திராவிட கட்சிகள் இந்த விடயத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறவில்லை.

நிலச்சீர்திருத்த சட்டங்கள்

[தொகு]
  • Tamil Nadu Agricultural Land Ceiling Act [1]

தமிழ்நாட்டு அரசு மீது விமர்சனங்கள்

[தொகு]

வார்ப்புரு:C quote நம்வாழ்வார் (இயற்கை அறிவியலாளர்) - மே 2008 - தீராநதி நேர்காணல்

வெளி இணைப்புகள்

[தொகு]