உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழிசை மூவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழிசை மூவர் அல்லது தமி‌ழிசை மும்மூர்த்திகள் அல்லது ஆதி மும்மூர்த்திகள் என்போர் தமிழிலேயே பாட்டெழுதி, தமிழிலேயே பாடித் தமிழிசையை வளர்த்த, அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர் மற்றும் மாரிமுத்தாப்பிள்ளை எனும் மூன்று பெருமக்கள் ஆவார். பொதுவாக கருநாடக இசையின் மும்மூர்த்திகள் என்று அறியப்படும் தியாகராசர், சியாமா சாஸ்திரிகள், முத்துச்சாமி தீட்சிதர் ஆகியோரை விட, இவர்கள் காலத்தால் முற்பட்டவர்கள்.

தமிழிசை மூவ‌ரே கிருதி என்று அழைக்கப்படும் கீர்த்தனைகளுக்கு வடிவம் கொடுத்தோர். இன்று உள்ள பல்லவி, அனுபல்லவி, சரணம் அல்லது எடுப்பு, தொடுப்பு, முடிப்பு எனும் அமைப்பு இவர்களின் பாடல்களிலேயே காணக்கிடைக்கிறது.

தமிழிசை மூவருக்குத் தமிழக அரசு சார்பில் சீர்காழியில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு சிலர் தமிழிசை நால்வர் என்று சொல்லி, பாபநாசம் சிவன் அவர்களையும் இந்த வரிசையில் வைத்துப் பார்ப்பர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழிசை_மூவர்&oldid=1329679" இலிருந்து மீள்விக்கப்பட்டது