உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழகத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பொது இடங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரித்தானியர்கள் இந்தியாவை விட்டு விலகிய பின் இந்தியாவில் பல தெருக்கள், சாலைகள், கட்டிடங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டன. தமிழ்நாட்டிலும் அவ்வாறான மாற்றங்கள் நிகழ்ந்தன. மெட்ராஸ் மாகாணம் என்ற பெயர் சுதந்திரத்திற்குப் பின்பு மெட்ராஸ் மாநிலம் என்றும் பின்பு தமிழ்நாடு என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மெட்ராஸ் நகரின் பெயர் சென்னை என 1996 ஆம் ஆண்டு மாற்றப்பட்டது.

சென்னையில் செய்யப்பட்ட பெயர் மாற்றங்கள்

[தொகு]
  • மவுண்ட் ரோடு - அண்ணா சாலை
  • எட்வர்ட் எலியொட் சாலை - டாக்டர். ராதாகிருஷ்ணன் சாலை
  • எலியொட் பீச் ரோடு - சர்தார் படேல் சாலை
  • மொவ்ப்ரே ரோடு - டி. டி. கிருஷ்ணமாச்சாரி சாலை
  • கமான்டர் இன் சீப் ரோடு - எத்திராஜ் சாலை
  • நுங்கம்பாக்கம் ஹைரோட் - மகாத்மா காந்தி சாலை
  • பல்லவன் போக்குவரத்துக் கழகம் - மாநகர போக்குவரத்துக் கழகம் (MTC)
  • சேப்பாக்கம் ஸ்டேடியம் - எம். ஏ. சிதம்பரம் அரங்கம்
  • வாரன் ரோடு - பக்தவத்சலம் சாலை
  • லாயட்ஸ் ரோடு - அவ்வை சண்முகம் சாலை
  • ஆலிவர் ரோடு - முசிறி சுப்பிரமணியம் சாலை
  • லட்டிஸ் பரிட்ஜ் ரோடு - கல்கி சாலை

சென்னையில் உள்ள பல இடங்கள் ஆங்கிலேயர் காலத்தில் பெயர் மருவி அழைக்கப்பட்டன:

தமிழகத்தில் செய்யப்பட்ட பிற பெயர் மாற்றங்கள்

[தொகு]

போக்குவரத்து கழகங்கள்

[தொகு]

தமிழக அரசின் போக்குவரத்து கழகமானது தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் பேருந்துகளை இயக்கிவருகிறது. 1997 ஆம் ஆண்டுக்கு முன்புவரை போக்குவரத்து கழகங்களுக்கு அந்தந்த பகுதியை சேர்ந்து முக்கிய பிரமுகர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்கள் பெயர்களே சூட்டப்பட்டிருந்தன. கடைசியாக 1997 ஆம் ஆண்டு விருதுநகரை தலைமையிடமாகக் கொண்டு வீரன் சுந்தரலிங்கம் என்ற புதிய போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்டது. ஆனால் 1997 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பட்ட சாதி வன்முறையில் புதிதாக உருவாக்கப்பட்டிருந்த வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்து கழகங்களின் பேருந்துகள் தாக்குதலுக்கு உள்ளாயின. வீரன் சுந்தரலிங்கம் பெயர் பொருந்திய பேருந்துகள் சிலரால் எரிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து அனைத்து போக்குவரத்து கழகங்களின் பெயர்களும் "தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகங்கள்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டன.

  • பல்லவன் போக்குவரத்து கழகம் மற்றும் Dr. அம்பேத்கார் போக்குவரத்து கழகம் - மாநகர போக்குவரத்து கழகம் (MTC) (த.நா- 01/02)
  • திருவள்ளுவர் போக்குவரத்து கழகம் மற்றும் ராஜீவ் காந்தி போக்குவரத்து கழகம் - அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC) (த.நா-01/07)
  • தந்தை பெரியார் போக்குவரத்து கழகம் - TNSTC விழுப்புரம் பிரிவு 1 (த.நா-32)
  • பட்டுகோட்டை அழகிரி போக்குவரத்து கழகம் - TNSTC விழுப்புரம் பிரிவு 2 (வேலூர்) (த.நா-23)
  • புரட்சி தலைவர் எம். ஜி. ஆர் போக்குவரத்து கழகம் - TNSTC விழுப்புரம் பிரிவு 3 (காஞ்சிபுரம்) (த.நா-21)
  • சோழன் போக்குவரத்து கழகம் - TNSTC கும்பகோணம் பிரிவு 1 (த.நா-49 பின் த.நா-68)
  • தீரன் சின்னமலை போக்குவரத்து கழகம் - TNSTC கும்பகோணம் பிரிவு 2 (திருச்சி) (த.நா-45)
  • தந்தை பெரியார் போக்குவரத்து கழகம் - TNSTC விழுப்புரம் பிரிவு 1 (த.நா-32)
  • பட்டுகோட்டை அழகிரி போக்குவரத்து கழகம் - TNSTC விழுப்புரம் பிரிவு 2 (வேலூர்) (த.நா-23)
  • புரட்சி தலைவர் எம். ஜி. ஆர் போக்குவரத்து கழகம் - TNSTC விழுப்புரம் பிரிவு 3 (காஞ்சிபுரம்) (த.நா-21)
  • சோழன் போக்குவரத்து கழகம் - TNSTC கும்பகோணம் பிரிவு 1 (த.நா-49 பின் த.நா-68)
  • தீரன் சின்னமலை போக்குவரத்து கழகம் - TNSTC கும்பகோணம் பிரிவு 2 (திருச்சி) (த.நா-45)
  • மருது பாண்டியர் போக்குவரத்து கழகம் - TNSTC கும்பகோணம் பிரிவு 3 (காரைக்குடி) (த.நா-63)
  • வீரன் அழகு முத்துகோன் போக்குவரத்து கழகம் - TNSTC கும்பகோணம் பிரிவு 4 (புதுக்கோட்டை) (த.நா-55)
  • அண்ணா போக்குவரத்து கழகம் - TNSTC சேலம் பிரிவு 1 (த.நா-27)
  • அன்னை சத்யா போக்குவரத்து கழகம் - TNSTC சேலம் பிரிவு 2 (தர்மபுரி) (த.நா-29)
  • சேரன் போக்குவரத்து கழகம் - TNSTC கோயம்புத்தூர் பிரிவு 1 (த.நா-37 பின் த.நா-38)
  • ஜீவா போக்குவரத்து கழகம் - TNSTC கோயம்புத்தூர் பிரிவு 2 (ஈரோடு) (த.நா-33)
  • பாரதியார் போக்குவரத்து கழகம் - TNSTC கோயம்புத்தூர் பிரிவு 3 (ஊட்டி) பின் TNSTC கோயம்புத்தூர் பிரிவு 1 உடன் இணைக்கப்பட்டது (த.நா-43)
  • பாண்டியன் போக்குவரத்து கழகம் - TNSTC மதுரை பிரிவு 1 (த.நா-59 பின் த.நா-58)
  • கட்டபொம்மன் போக்குவரத்து கழகம் - TNSTC மதுரை பிரிவு 2 (திருநெல்வேலி) (த.நா-72)
  • இராணி மங்கம்மாள் போக்குவரத்து கழகம் - TNSTC மதுரை பிரிவு 3 (திண்டுக்கல்) (த.நா-57)
  • நேசமணி போக்குவரத்து கழகம் - TNSTC மதுரை பிரிவு 4 (நாகர்கோவில்) (த.நா-74)
  • வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்து கழகம் - TNSTC மதுரை பிரிவு 5 (விருதுநகர்) (த.நா-67)

மேற்கோள்கள்

[தொகு]