தபீர்புரா
தபீர்புரா | |
---|---|
வருவாய் கிராமம் | |
ஆள்கூறுகள்: 17°21′58″N 78°28′34″E / 17.366°N 78.476°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலங்காணா |
மாவட்டம் | ஐதராபாத்து |
மெற்றோ | ஐதராபாத்து |
அரசு | |
• நிர்வாகம் | பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 500 023 |
வாகனப் பதிவு | டிஎஸ் |
மக்களவைத் தொகுதி | ஐதராபாத்து |
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதி | சார்மினார் |
திட்டமிடம் நிறுவனம் | பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி |
தபீர்புரா ( Dabeerpura ) என்பது இந்தியாவின் தெலுங்கானாவிலுள்ள ஐதராபாத்தின் பழைய நகரப் பகுதியிலுள்ள பழமையான சுற்றுப்புறங்களில் ஒன்று. [1] இதை யாகுத்புரா, சஞ்சல்குடா, புராணி அவேலி, நூர்கன் பஜார், மற்றும் ஆசாம்புரா ஆகியவை சூழ்ந்துள்ளன. "தர்வாசா" என்று அழைக்கப்படும் அசல் பதின்மூன்று நுழைவாயில்களில் தபீர்பூராவும் ஒன்றாகும். 1990இல் கட்டப்பட்ட இந்த புறநகரில் தொடர்வண்டி பாதையில் பெரிய மேம்பாலம் ஒன்று உள்ளது.
சொற்பிறப்பியல்
[தொகு]தில்லியில் பிறந்த பிரபல உருதுக் கவிஞரும் எழுத்தாளருமான அப்துல் சமத் என்பவருக்கு 'தபீர்-உல்-முல்க்' என்ற தலைப்பு வழங்கப்பட்டதன் மூலம் தபீர்பூரா என்று பெயரிடப்பட்டது.
புள்ளிவிவரம்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த கிராமத்தில் 1265 வீடுகளும், 1134 ஹெக்டேர் பரப்பளவில் 5398 மக்கள்தொகையும் உள்ளன. கிராமத்தில் ஆண்களின் எண்ணிக்கை 2714, பெண்களின் எண்ணிக்கை 2684 . பட்டியலின மக்களின் எண்ணிக்கை 1316, பட்டியலின பழங்குடியினரின் எண்ணிக்கை 75 ஆகும். கிராமத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்பு இருப்பிடக் குறியீடு 574095 ஆகும்.[2]
பொதுப் போக்குவரத்து
[தொகு]தெலங்காணா மாநில போக்குவரத்து நிறுவனம் இயக்கும் பேருந்துகள் மூலம் தபீர்புரா நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு பேருந்து முனையமும் அருகில் இருப்பதால், இது சார்மினார், நம்பள்ளி மற்றும் கோட்டியுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இது நிசாம் ஐதராபாத்தின் நுழைவாயில் ( இப்போது பழைய நகரம் ) பழைய நகரம்) என்று அழைக்கப்படுகிறது
தபீர்புராவில் ஐதரபாத் எம்.எம்.டி.எஸ் தொடர் வண்டி நிலையம் உள்ளது. இதனுடைய கால அட்டவணையை தென் மத்திய இரயில்வே இணையதளத்தில் காணலாம்.
அடையாளங்கள்
[தொகு]- தபீர்புரா தர்வாசா, நிசாமின் ஆட்சியின் போது கட்டப்பட்ட பதின்மூன்று அசல் நுழைவாயில்களில் ஒன்றான புராணி அவேலியின் நுழைவாயிலாக இருந்தது.
- பிபி கா அலவா
- கம்லிவாலே ஷா சஹாப் தர்கா, ஒரு முஸ்லிம் துறவியின் கல்லறை.
- ஜபார் ஹோட்டல்
- தபீர்புரா மேம்பாலம்
குறிப்புகள்
[தொகு]- ↑ "Dabeerpura PS". Archived from the original on 5 April 2015. பார்க்கப்பட்ட நாள் 28 August 2015.
- ↑ "Office of the Registrar General & Census Commissioner, India - Village amenities of 2011".