தபால் வாக்கு
தபால் வாக்களிப்பு (Postal voting) , தபால் வாக்கு அல்லது அஞ்சல் வாக்கு என்பது, தேர்தலில் வாக்காளர்கள் ஒரு வாக்குச் சாவடியில் நேரில் அல்லது மின்னணு வாக்கு முறை மூலம் வாக்களிக்கும் வழக்கமான முறைக்குப் பதிலாக தபால் மூலமாக தங்களது வாக்கினைப் பதிவு செய்வதனைக் குறிப்பதாகும்.
வழக்கமாக, திட்டமிடப்பட்ட தேர்தல் நாளுக்கு முன்பே தபால் வாக்குகள் திருப்பி அனுப்பப்பட வேண்டும். இருப்பினும், சில அதிகாரப்பூர்வ அனுமதிகளுடன் வாக்குச் சாவடியில் வாக்களிக்கவோ வாக்குச் சீட்டை நேரில் பதிவுசெய்யவோ அனுமதிக்கலாம். அஞ்சல் வாக்குகள் கையால் அல்லது வருடல் மூலம் மின்னணு முறையில் எண்ணப்படலாம். அஞ்சல் வாக்களிப்பின் வரலாறு 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அமெரிக்காவின் கலிபோர்னியா, ஓரிகான் மற்றும் வாசிங்டனில் நடத்திய ஆய்வில், தபால் வாக்கு கிடைக்கும் தன்மைகள் வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்பதைக் காட்டுகிறது எனக் கூறுகிறது.[1][2][3]
நாடுகள் வாரியாக
[தொகு]இந்தியா
[தொகு]இந்தியாவில் தபால் வாக்களிப்பு முறையானது, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மின்னணுப் பரிமாற்ற அஞ்சல் வாக்குச் சீட்டு (ETPB) முறை மூலம் மட்டுமே நடைபெறுகிறது. பதிவு செய்யப்பட்ட தகுதியான வாக்காளர்களுக்கு வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டு அவர்கள் தபால் மூலம் வாக்குகளைக் குறிப்பிட்ட தொகுதிகளுக்கு அனுப்புகிறார்கள். வாக்குப் பதிவு அலுவலர்களாகப் பணிபுரிபவர்களுக்கு குறிப்பிட்ட இடங்களில் பெட்டிகள் மூலம் வாக்குச் சீட்டுகள் பெறப்படுகின்றன. வாக்குகள் எண்ணப்படத் தொடங்கும் போது, இந்த தபால் வாக்குகள் மற்ற அனைத்து வாக்காளர்களின் மின்னணு வாக்குப்பதிவு வாக்குகள் எண்ணுவதற்கு முன்பாக எண்ணப்படுகின்றன. சில குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே தபால் வாக்காளர்களாக பதிவு செய்யத் தகுதியுடையவர்கள். இரானுவத்தில் பணிபுரிபவர்கள், மாநில காவல்துறையில் பணிபுரியும் நபர்கள் மற்றும் அவர்களது மனைவிகள், ஆசிரியர்கள், அதிகாரப்பூர்வமாக வெளிநாடுகளில் பணியமர்த்தப்பட்ட இந்திய அரசாங்கத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தபால் வாக்குக்கு பதிவு செய்யலாம், இவர்கள் சேவை வாக்காளர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். மேலும், தடுப்புக் காவலில் உள்ளவர்கள், ஊனமுற்றவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்குகளைப் பயன்படுத்தலாம். கைதிகள் வாக்களிக்க முடியாது. [4][5][6] ஊடகப் பணியாளர்களும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய அஞ்சல் வாக்குச்சீட்டைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர்.[7] இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தபால் வாக்குகளைச் சரிபார்த்தலில் இருக்கும் வெளிப்படைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பினர் மேலும் இதில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாகக் கூறினர்.[8][9][10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hill, Charlotte; Grumbach, Jacob; Bonica, Adam; Jefferson, Hakeem (2020). "We Should Never Have to Vote in Person Again" (in en-US). The New York Times இம் மூலத்தில் இருந்து 2020-12-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201203202518/https://www.nytimes.com/2020/05/04/opinion/coronavirus-vote-by-mail.html.
- ↑ Wines, Michael (2020-05-25). "Which Party Would Benefit Most From Voting by Mail? It's Complicated" (in en-US). The New York Times இம் மூலத்தில் இருந்து 2020-12-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201211160914/https://www.nytimes.com/2020/05/25/us/vote-by-mail-coronavirus.html.
- ↑ Thompson, Daniel M.; Wu, Jennifer A.; Yoder, Jesse; Hall, Andrew B. (2020-06-09). "Universal vote-by-mail has no impact on partisan turnout or vote share" (in en). Proceedings of the National Academy of Sciences 117 (25): 14052–14056. doi:10.1073/pnas.2007249117. பன்னாட்டுத் தர தொடர் எண்:0027-8424. பப்மெட்:32518108. Bibcode: 2020PNAS..11714052T.
- ↑ "Postal ballots: Who can vote through ETPB, how to get registered and how the voting is done; an explainer". First Post. 2 April 2019. Archived from the original on 30 July 2020. பார்க்கப்பட்ட நாள் 17 October 2019.
- ↑ Maharashtra, Haryana Elections 2019: Can You Vote By Postal Ballot If You Aren't Living At Home? பரணிடப்பட்டது 2020-07-30 at the வந்தவழி இயந்திரம், Huffington Post, 26 September 2019.
- ↑ "People over 80 years of age, disabled can now vote through postal ballot". Jagran. 29 October 2019. Archived from the original on 30 July 2020. பார்க்கப்பட்ட நாள் 29 October 2019.
- ↑ "Livemint, on 1 Feb 2022". Livemint இம் மூலத்தில் இருந்து 3 April 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220403165645/https://www.livemint.com/news/india/media-persons-can-now-cast-vote-via-postal-ballot-facility-election-commission-11642334908305.html#:~:text=Media%20persons%20authorised%20by%20the%20Election%20Commission%20of%20India%20(ECI)%20can%20exercise%20their%20franchise%20using%20the%20postal%20ballot%20facility%2C%20said%20the%20election%20body%20on%20Sunday.%C2%A0.
- ↑ "Twitter". mobile.twitter.com. Archived from the original on 2021-03-08. பார்க்கப்பட்ட நாள் 2020-06-30.
- ↑ "Latest changes on postal ballots to favour ruling party: Sitaram Yechury to EC". Deccan Herald (in ஆங்கிலம்). 2020-06-30. Archived from the original on 2021-03-08. பார்க்கப்பட்ட நாள் 2020-06-30.
- ↑ "Postal ballots for voters over 64 gives ruling party an edge: Yechury" (in en-IN). The Hindu. 2020-06-29 இம் மூலத்தில் இருந்து 2021-03-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210311021646/https://www.thehindu.com/news/national/postal-ballots-for-voters-over-64-gives-ruling-party-an-edge-yechury/article31948479.ece.