உள்ளடக்கத்துக்குச் செல்

தனித்தமிழ் எழுத்து முறைமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தனித்தமிழ் எழுத்து முறைமை என்பது பிராமி எழுத்துமுறை கல்வெட்டுகளின் மொழி தமிழில் எழுதப்பட்டதா என கண்டறியும் முறையாகும். பெரும்பாலும் பிராகிருத மொழிகளின் பிராமி எழுத்துக்களும் தமிழி எழுத்துக்களும் வடிவளவில் பெருமளவு ஒத்துப் போவதால் இந்தியாவிலும் இலங்கையிலும் கிடைக்கும் கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்கள் தமிழா பிராகிருதமா என்று அறிவதில் இடர் நேரும். ஆனால் ழ, ள, ற, ன போன்ற தமிழ் மொழிக்கே உரிய எழுத்துக்கள் கல்வெட்டுகளிலோ அல்லது தமிழ் பிராமி பொறிப்புகளிலோ காணப்படுமாயின் அதை தமிழி எழுத்து என எளிமையாக அடையாளம் காணுவர்.[1]

மேற்கோள்களும் குறிப்புகளும்

[தொகு]
  1. http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/kharoshthi.htm