தந்த மூக்கு மரங்கொத்தி
தந்த மூக்கு மரங்கொத்தி | |
---|---|
1935 ஏப்ரலில் சிங்கர் டிராக்ட், லூசியானாவில் உள்ள சிங்கர் டிராக்டில் ஆர்தர் ஏ. ஆலன் எடுத்த ஒளிப்படம். பெண் பறவை திரும்பி வந்த நிலையில் ஆண் தந்த மூக்கு மரங்கொத்தி கூட்டைவிட்டு வெளியே வருகிறது. | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Campephilus |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/CampephilusC. principalis
|
இருசொற் பெயரீடு | |
Campephilus principalis (லின்னேயஸ், 1758) | |
Subspecies | |
| |
Estimated range of the ivory-billed woodpecker prior to 1860 (solid line) and in 1891 (hatched area) – by Edwin Hasbrouck | |
வேறு பெயர்கள் | |
Picus principalis Linnaeus, 1758 |
தந்த மூக்கு மரங்கொத்தி ( Ivory-billed woodpecker ) என்பது உலகிலிருந்து அற்றுவிட்ட மரங்கொத்தி ஆகும். இது தெற்கத்திய ஐக்கிய அமெரிக்கா மற்றும் கியூபாவின் நீர்நிலை படிவுநில கடின மரக் காடுகள் மற்றும் மிதவெப்ப ஊசியிலையுள்ள காடுகளைச் சேர்ந்தது. [a] வாழ்விட அழிவு, வேட்டையாடுதலால் இவற்றின் எண்ணிக்க மிகமிகக் குறைத்துவிட்டதால் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இதை மிக அருகிய இனம் என வகைப்படுத்தும் செம்பட்டியலில் சேர்த்துள்ளது.[3] மேலும் அமெரிக்க பறவைகள் சங்கத்தால் "நிச்சயமாக அல்லது அநேகமாக அழிந்துவிட்டன" என்று வரையறைக்கபட்டுள்ளது.[4] 1944 ஆம் ஆண்டு லூசியானாவில் ஒரு அமெரிக்க தந்த மூக்கு மரங்கொத்தி பார்வையில் பட்டது. மேலும் 1987 ஆம் ஆண்டில் கியூபாவின் தந்தத்த மூக்கு மரங்கொத்தி கடைசியாக பார்வையில் சிக்கியது. அதற்கு முந்தைய ஆண்டும் பறவை தென்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.[5][6]
இந்தப் பறவையின் விருப்பமான உணவில் பெரிய வண்டு குடம்பிகள் (லார்வா) உள்ளன. குறிப்பாக மரத்தில் துளையிடும் செராம்பிசிடே வண்டுகள், தென் மாக்னோலியா, பேக்கான்கள், ஏகோர்ன்கள், இக்கரி கொட்டைகள், காட்டு திராட்சைகள் மற்றும் பேரிச்சம்பழங்கள் போன்ற பல்வேறு பழங்கள் உட்பட உணவுப் பொருட்களை உண்கிறது. மரத்தை துளையிடும் வண்டுகளின் குடம்பிகளை உணவாக கொள்ள, இப்பறவை அதன் பெரிய அலகைப் பயன்படுத்தி, மரங்களின் பட்டைகளை கொத்தி அகற்றும். இது வாழும் பகுதியில் வேறு எந்த உயிரினங்களாலும் இந்த கடினமான மரப்பட்டைகளை அகற்ற முடியாது, மேலும் இந்த குடம்பிகளை வேட்டையாடுவதில் ஐவரி அலகு மரங்கொத்திக்கு உண்மையான போட்டியாளர்கள் யாருமில்லை.
இது அமெரிக்காவின் மிகப்பெரிய மரங்கொத்தி மற்றும் உலகின் மிகப்பெரிய மரங்கொத்திகளில் ஒன்றாகும். இதன் மொத்த நீளம் 48 முதல் 53 செமீ (19 முதல் 21 அங்குலம்) மற்றும் சராசரியாக அறக்கைகளின் அகலம் 76 செமீ (30 அங்குலம்) இருக்கும். வளர்ந்த பறவையின் அலகு தந்த நிறத்தில் இருக்கும். எனவே இதுவே பறவையின் பொதுவான பெயராக ஆனது. இளம் பறவைகளுக்கு இது சுண்ணாம்பு வெள்ளை நிறத்தில் இருக்கும். இப்பறவைகள் மரங்களடர்ந்த சதுப்பு நிலம், ஒப்பீட்டளவில் திறந்த பழைய-வளர்ந்த காடுகள், கியூபாவில், மலையக பைன் காடுகள் உள்ளிட்ட வாழ்விடங்களில் காணப்பட்டது. ஆண், பெண் பறவைகள் சேர்ந்து ஒரு மரத்தில் தரையில் இருந்து தோராயமாக 15-70 அடி (4.6-21.3 மீ) உயரத்தில் ஒரு பொந்தை கொத்தி உருவாக்குகின்றன. கூடு உருவாக்க பயன்படுத்தபடும் அந்த பொந்தின் ஆழம் தோராயமாக 50 செ.மீ (20அங்) இருக்கும்.
குறிப்புகள்
[தொகு]- ↑ Known in Cuban Spanish as the picamaderos picomarfil ("ivory bill woodpecker") or carpintero real ("royal carpenter/woodpecker").
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2020). "Campephilus principalis". IUCN Red List of Threatened Species 2020: e.T22681425A182588014. doi:10.2305/IUCN.UK.2020-3.RLTS.T22681425A182588014.en. https://www.iucnredlist.org/species/22681425/182588014. பார்த்த நாள்: 19 November 2021.
- ↑ "NatureServe Explorer 2.0". explorer.natureserve.org. பார்க்கப்பட்ட நாள் 28 March 2022.
- ↑ "Ivory-billed Woodpecker Campephilus principalis". Archived from the original on 24 October 2018. பார்க்கப்பட்ட நாள் 24 October 2018.
- ↑ "Annual Report of the ABA Checklist Committee: 2007 – Flight Path" (PDF). Archived from the original (PDF) on 4 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2012-11-13.
- ↑ "Day 1: The Journey Begins". Audubon (in ஆங்கிலம்). 2016-04-11. பார்க்கப்பட்ட நாள் 2022-07-03.
until 1986, when Lester Short of the American Museum of Natural History and his colleagues announced seeing Ivory-bills in the mountains of eastern Cuba...The last sighting in Cuba was in 1987.
- ↑ LAMMERTINK, MARTJAN; ESTRADA, ALBERTO R. (1995). "Status of the Ivory-billed Woodpecker Campephilus principalis in Cuba: almost certainly extinct". Bird Conservation International: 5:53-59. https://www.cambridge.org/core/services/aop-cambridge-core/content/view/32D41A096E4EBFAA88363F6125430880/S095927090000294Xa.pdf/status-of-the-ivory-billed-woodpecker-campephilus-principalis-in-cuba-almost-certainly-extinct.pdf. "The Ivory-billed Woodpecker Campephilus principalis has suffered from destruction of its habitat over the whole of its range, being last recorded in eastern Cuba (Ojito de Agua) in 1987.".