உள்ளடக்கத்துக்குச் செல்

தந்துமாறன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தந்துமாறன் சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன்.

புறநானூறு 360 எண்ணுள்ள பாடல் இவனைப் பாடியது. புலவர் சங்கவருணர் என்னும் நாகரியர் இவனைப் பாடியுள்ளார்.

புறநானூற்றைத் தொகுத்தவர் இந்தப் பாடலுக்குத் தந்துள்ள அடிக்குறிப்பு 'தந்துமாறனைப் பாடியது' என்று குறிப்பிடுகிறது. பாடலில் இந்த அரசனின் பெயர் இல்லை. எனினும் 'பெரும கேண்மதி!' என்று வருகிறது. இது இந்தப் பாண்டியனை விளித்த மொழி என அறிதல் வேண்டும்.

இவன் தன்னைப்பற்றியும், தன் வாழ்க்கைப் பெருமிதம் பற்றியும் எண்ணி இறுமாந்திருந்தான். உலகின் நிலையாமை பற்றியும், உலக வாழ்க்கையின் நிலையில்லாத் தன்மை பற்றியும் புலவர் இந்தப் பாடலில் அரசனுக்கு எடுத்துரைத்தார். பாண்டியனின் இறுமாப்பு மறைந்தது.

சந்துமாறன் சில நாள் ஒழுக்கம் தவறி வாழ்ந்தான் போலும். அத்துடன் தன்னை நாடி வந்தவர்களிடம் ஏதோ எதிர்பார்த்தான் போலும். அதனால் புலவர் அவனை வேண்டிக்கொள்கிறார்.

  • தந்துமாறனை வேண்டுதல்
  • எந்த நாளும் நீ ஒழுக்கம் தவறக் கூடாது.
  • உன்னை நச்சி வருபவர் கையிலிருந்து நீ எதனையும் எதிர்பார்க்கக் கூடாது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தந்துமாறன்&oldid=1741737" இலிருந்து மீள்விக்கப்பட்டது