தந்ததாதுக் கோயில் நூதனசாலை
பன்சிய பனத் ஜாதகம், தம்பதெனிய இராச்சிய இலக்கியக் கலைப்படைப்பு. | |
அமைவிடம் | கண்டி, இலங்கை |
---|---|
ஆள்கூற்று | 7°17′38″N 80°38′19″E / 7.29389°N 80.63861°E |
வகை | மதம் & வரலாறு |
வலைத்தளம் | Sri Dalada Maligawa |
தந்தத்தாது கோயில் நூதனசாலை அல்லது தந்தத்தாது கோயில் அருங்காட்சியகம் (சுருக்கமாக சிறி தலதா நூதனசாலை[1]) என்பது தந்ததாதுக் கோயிலின் நூதனசாலை ஆகும். இது இலங்கையின் கண்டியிலுள்ள தலதாமாளிகையின் முதலாம் மாடியிலும் இரண்டாம் மாடியிலும் அமைந்துள்ளது. முதலாம் மாடியில் வரலாற்று பதிவுகள், மகாநாயக தேரர்களின் பட்டியல், கண்டி அரசர்களின் பட்டியல், அவர்களின் உருவப்படங்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் மாடியில் கலைப்பொருட்கள், பேழைகள் போன்ற சமயம் சார்ந்த பொருட்கள், சிலைகள், நகைகள் மற்றும் பல்வேறு இதர பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கீர்த்தி சிறீ இராஜசிங்க மன்னனால் வழங்கப்பட்ட வெள்ளியினால் ஆன நீர்க்குடம், சிறி விக்கிரம இராஜசிங்கனால் வழங்கப்பட்ட வெள்ளியினாலான தொங்கும் விளக்கு, தாய்லாந்து மன்னன் பொரம் கொட்டினால அனுப்பப்பட்ட புத்தரின் பாதச்சுவடுகளின் வர்ணம் பூசப்பட்ட நகல், மொகில்புத்த தேரரின் உடல் நினைவுச்சின்னங்களைக் கொண்டுள்ள பேழை ஆகியவை இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள தனித்துவம் மிக்க குறிப்பிடத்தக்க பொருட்களாகும்.[1] கீர்த்தி சிறீ இராஜசிங்க மன்னால் பயன்படுத்தப்பட்ட தலைப்பாகை, பருத்தி மேலாடை, மார்புப்பகுதியில் அணியும் ஆடை, சரவாலே எனும் காற்சட்டை, கரவனிய எனும் காற்சட்டைக்கு மேலே அணியும் பருத்தி ஆடை, கைக்குட்டை ஆகியனவும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Sri Dalada Museum". Sri Dalada Maligawa. Archived from the original on 31 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 31 May 2015.
- ↑ "The King of Kandy and John Pybus". The Island (Sri Lanka). Archived from the original on 31 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 31 May 2015.