உள்ளடக்கத்துக்குச் செல்

தணிகைச்செல்வன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தணிகைச்செல்வன்
இயற்பெயர்
எத்திராஜன்
பிறப்பு(1935-02-28)28 பெப்ரவரி 1935
இறப்பு29 அக்டோபர் 2024(2024-10-29) (அகவை 89)
தேசியம்இந்தியர்

தணிகைச்செல்வன் (பிப்ரவரி 28, 1935 - அக்டோபர் 29, 2024) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞராவார். எழுபதாண்டுகளாகக் கவிதைகள் எழுதியும் பல பொதுவுடைமை மேடைகளில் கவிதை வாசித்தும் வந்துள்ளார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

இவர் மதராஸ் மாகாணத்தின்செங்கல்பட்டு மாவட்டததில் பாலாற்றங்கரையின் அருகே உள்ளஉறைக்​காட்டுப்​பேட்​டை​யில் 1935 பிப்ரவரி 28 ஆம் நாள் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தார்.[1] மருத்துவத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றார். வயது மூப்பின் காரணமாக 90 ஆவது வயதில் 2024 அக்டோபர் 29 ஆம் நாள் காலமானார்.[2]

இலக்கியப் பணி

[தொகு]

செம்​மலர், குடியரசு, முரசொலி, நந்தன், தமிழர் கண்ணோட்டம், தாய்​மண், சிந்​தனை​யாளன், தினமணிக் ​க​திர், தென்​மொழி, கவிதாசரண் போன்ற இதழ்களில் கவிதைகளை எழுதியுள்ளார்.

கவிதை நூல்கள்

[தொகு]

இவர் எழுதி வெளியிட்ட கவிதை நூல்கள்.

  1. தணிகைச்செல்வன் கவிதைகள் (1975)
  2. சமூக சேவகி சேரிக்கு வந்தாள்(1978)
  3. பூபாலம் (1981)
  4. ஒரு துண்டு இந்தியாவும் நானும் (1983)
  5. சிவப்பதிகாரம் (1986)
  6. உலக்கையிலும் பூ பூக்கும் (1991)
  7. சகாராவின் தாகம் (1997)
  8. தணிகைச்செல்வன் கவிதைகள் தொகுப்பு நூல்கள்(2001)[3]

கட்டுரை நூல்கள்

[தொகு]

இவர் எழுதி வெளியிட்ட கட்டுரை நூல்கள்.

  1. இலக்கும் இலக்கியமும் (2003)
  2. தத்துவ தலைமை (2015)
  3. ஆட்சி மாற்றமும் அடிப்படை மாற்றமும் ஒரு மார்க்சிய அரிச்சுவடி (2023)
  4. கிழக்கு முதல் கிழக்கு வரை
  5. கவிதைகளில் அவன் மானிடன்

பொதுவுடைமைப் பணி

[தொகு]

மருத்​துவத் துறைப் பணியிலிருந்து பொதுவுடைமைச் சிந்தனை ஈர்ப்பால் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் 1958 இல் தன்னை இணைத்துக் கொண்டார்.[4] சீனப் போரின் போது இரண்டுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டார்.[1] தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கிய முன்னோடிகளுள் ஒருவராவார். ஈழப் பிரச்சினையில் கட்சியில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் சிபிஎம் கட்சியிலிருந்தும் தமுஎசவிலிருந்தும் விலகினார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "அஞ்சலி: தணிகைச்செல்வன்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1334582-tribute-thanigaichelvan-the-majestic-slogan-of-tamil-poetry.html. பார்த்த நாள்: 4 November 2024. 
  2. "செய்தி வெளியீடு எண் : 1828". செய்தி மக்கள் தொர்புத்துறை. http://cms.tn.gov.in/sites/default/files/press_release/pr301024_1828.pdf. பார்த்த நாள்: 4 November 2024. 
  3. "தணிகைச்செல்வன் கவிதைகளில் தமிழ்மொழி குறித்த கருத்தாக்கம்". கீற்று. பார்க்கப்பட்ட நாள் 4 November 2024.
  4. "கவிஞர் தணிகைச் செல்வன் காலமானார்". தீக்கதிர். https://theekkathir.in/News/tamilnadu/madurai/poet-thanigai-selvan-passed-away. பார்த்த நாள்: 4 November 2024. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தணிகைச்செல்வன்&oldid=4136204" இலிருந்து மீள்விக்கப்பட்டது