தட்டிச் சுற்று
Appearance
தட்டிச் சுற்று என்பது கோயில் திருவிழாவின் போது நாகசுரம் மற்றும் தவில் போன்ற மங்கல இசைக் கருவி்களுடன் இறைவன் வீதி உலா முடிந்து கோயிலுக்குள் வந்தவுடன், இறைவனை நடுவில் நிறுத்தி மங்கல இசைக்குழுவினரும், தேவார பண்ணிசைக் குழுவினரும் இறைவனை மூன்று முறை வலம் வருவதைக் குறிக்கும். இது நடைபெறும் மண்டபத்தைத் "தட்டிச் சுற்று மண்டபம்" என்பர். திருவீழிமிழலை, திருவிடைமருதூர், திருவாவடுதுறை போன்ற சைவ சிவாலயங்களிலும், வைணவ சமயக் கோயில்களிலும் இச்சடங்கினை காணலாம்.[1]