தட்டான் பிடித்தல்
Appearance
தட்டான் பிடித்தல் ஒரு விளையாட்டு.
தட்டான் என்பது தும்பி. சிறுவர் சிறுமியர் இதனைப் பொறுமையாகப் பிடிப்பர்; வாலைப் பதுவிசாகப் பிடிப்பர். அது சுருண்டு கையைக் கடிக்கும்போது விட்டுவிடுவர்; அது பறந்து ஓடிவிடும். இது ஒரு வேடிக்கை விளையாட்டு.
தட்டான் பிடிக்கும்போது வேறொருவர் அதே தட்டானைப் பிடிக்க வந்தால் பாட்டும் பாடுவர்.
- தட்டான் தட்டான்
- காத் தட்டான்
- கள்ளத் தட்டான்
- கள்ளன் வந்தால் ஓடிப்போ
சூ சூ தட்டான்
சுப்ரமணி தட்டான்
உன்னை ஒருத்தன் புடிக்க வாரான்
ஓடிப்போ ஓடிப்போ
தட்டாம்பூச்சிகள்
[தொகு]மேலும் பார்க்க
[தொகு]கருவிநூல்
[தொகு]- கி. ராஜநாராயணன், வட்டார வழக்குச்சொல் அகராதி, ராஜபவனம், இடைச்செவல், 627216.