உள்ளடக்கத்துக்குச் செல்

தடுமாற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தடுமாற்றம் (Glitch) என்பது முறைமையொன்றில் ஏற்படும் குறுகிய காலத்திற்கு நீடிக்கும் தவறு ஆகும்.[1]

கணினித் தடுமாற்றம்

[தொகு]

பின்வரும் வழுக்கள் கணினித் தடுமாற்றங்களாகக் கொள்ளப்படும்.

  • தவறாக எழுதப்பட்ட மென்பொருள் (மென்பொருள் வழு)
  • இயக்குநரால் வழங்கப்பட்ட தவறான அறிவுறுத்தல்கள்
  • கண்டறியப்படாத செல்லுபடியாகாத உள்ளீட்டுத் தரவுகள்
  • கண்டறியப்படாத தொடர்பாடல் வழுக்கள்
  • கணினி நச்சுநிரல்கள்
  • கொந்துதல்

கணினித் தடுமாற்றங்களின் காரணமாகப் பின்வரும் விளைவுகள் ஏற்படக்கூடும்.

  • விசைப்பலகைச் செயல் பிழை
  • எண் விசைப் பழுது
  • அசாதாரணமான திரை
  • தற்போக்குச் செய்நிரற்செயல் பிழைகள்
  • அசாதாரணமாகச் செய்நிரல்கள் பதியப்படல்

ஒளித்தோற்ற விளையாட்டுத் தடுமாற்றம்

[தொகு]
தடுமாற்ற நகரம்

ஒளித்தோற்ற விளையாட்டுகளில், செய்நிரலர்களால் ஏற்படுத்தப்படாத செய்நிரலாக்கல் வழுவே தடுமாற்றம் எனப்படும். ஒளித்தோற்ற விளையாட்டுத் தடுமாற்றங்களாகத் தவறாகக் காட்சிப்படுத்தப்படும் வரைகலை, விளையாட்டு உறைதல், ஒலியில் மாறுபாடு ஏற்படுதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

போகிமொன் ரெட்டிலும் புளூவிலும் மிசிங்னம்பர் என்ற போகிமொனின் தோற்றமும் போகிமொன் ரெட், புளூ, யெலோ என்பவற்றில் தடுமாற்ற நகரம் என அழைக்கப்படும் இடத்தின் தோற்றமும் தடுமாற்றங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.[2]

தொலைக்காட்சித் தடுமாற்றம்

[தொகு]

பரப்பலின்போது தடுமாற்றங்கள் நிகழ்வதுண்டு. அலைவரிசை கிடைக்காமையினால் திரையில் கோடுகள் விழுவதும் தொலைக்காட்சித் தடுமாற்றங்களினுள்ளேயே அடக்கப்படும். சில சந்தர்ப்பங்களில் தொலைக்காட்சி நிலையங்களில் ஏற்படும் பிரச்சினைகளாலும் தொலைக்காட்சித் தடுமாற்றங்கள் ஏற்படுவதுண்டு

இதையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. தடுமாற்றம் (ஆங்கில மொழியில்)
  2. ["மிஸ்ஸிங்நோ (தடுமாற்றப் போகிமொன்) (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-05-27. பார்க்கப்பட்ட நாள் 2012-04-16. மிஸ்ஸிங்நோ (தடுமாற்றப் போகிமொன்) (ஆங்கில மொழியில்)]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தடுமாற்றம்&oldid=3557014" இலிருந்து மீள்விக்கப்பட்டது